உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 10 May 2020

உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத பழம் :

 
சாப்பாடு தான் உலகம் என எந்நேரமும், கண்டதைச் சாப்பிட்டு உடல் எடை எப்படியோ அதிகரித்து விடுகிறது. பின் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என ஜிம் செல்வது, டையட் இருப்பது என ஏதேதோ செய்தும் எவ்வித பலனும் இல்லையா. 
கவலை வேண்டாம், உடல் எடையைக் குறைத்து உடலில் எவ்வித நோய் வராமல் இருக்க நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் மற்றும் அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றியும் இங்குப் பார்ப்போம்..
உடல் எடையைக் குறைக்க அனைவருக்கும் பலன் தரும் பழமாக எலுமிச்சை இருக்கிறது. இதை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பாருங்கள்.


காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உடலில் ஜீரணமண்டத்தைச் சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போலச் செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தரப் பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a comment

Post Top Ad