குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத மருந்து. இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் போதும்.!! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 25 April 2021

குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத மருந்து. இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் போதும்.!!


இரவு நேரங்களில் குறட்டை அதிகமாக வந்தால் இதனை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இது எப்படி செய்வது என்பதை இப்போது இதில் தெரிந்து கொள்வோம்.

உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

1. தும்பை பூ
2. நல்லெண்ணெய் 100 மில்லி

செய்முறை:

முதலில் தும்பை பூவை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். பின் வானலியில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் தும்பை பூவை போடவும். ஈரப்பதம் போகும் வரை நன்கு தைல பதத்திற்கு காய்ச்சவும். பின் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதை இரவில் தினமும் மூக்கில் 2 சொட்டு இட்டு வந்தால் மூன்று மாதத்தில் குறட்டைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad