கால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா? உடனே என்ன செய்ய வேண்டும்? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 9 August 2020

கால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா? உடனே என்ன செய்ய வேண்டும்?


உடலில் நீர்த் தேக்கம் ஏற்பட முக்கிய காரணம் உடலில் தேங்கும் அதிகப்படியான சோடியம் ஆகும். இந்த சோடியத்தால் திசுக்கள் அழற்சிக்குள்ளாகிறது. இந்த பிரச்சினை வராமல் தடுக்க அதிகப்படியான ஆல்கஹால் மற்றும் சேச்சுரேட்டேடு கொழுப்புகளை தவிர்க்க வேண்டும்.

How to Fight Fluid Retention in the Legs
இந்த நீர்த்தேக்கத்தால் கால்கள் வீங்கி போய் நடக்க முடியாத அசெளகரியமான சூழல் உருவாகும். இந்த கால்களில் ஏற்படும் நீர்த்தேக்கம் பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிறது. அதிலும் கோடை காலங்களில் மற்றும் உடலின் சீரோட்ட நிலையில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகிறது.நீர்த்தேக்கம்
நீர் தேங்கும் பகுதியில் உள்ள திசுக்கள் அங்குள்ள நச்சு நீரால் அழற்சியாகி அந்த நீர் அப்படியே இரத்த நாள்களுக்கு செல்லுகிறது. இதனால் கால் பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் வலி கூட ஏற்படுகிறது.

இந்த நீர்த் தேக்கத்தை எப்படி கையாள்வது என்பதை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.
MOST READ: முடிக்கு வாசலின் தடவினா நல்லா வளருமாமே! எப்படி அப்ளை பண்ணணும்?


காரணங்கள்
அதிக உடல் எடை

அதிகப்படியான உடல் எடை கொண்ட பெண்கள், ஆண்களுக்கு இந்த கால்களில் நீர்த் தேக்கம் ஏற்படுகிறது.


அதிக நேரம் உட்கார்தல்
இரயில் மற்றும் விமானத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதாலும் இந்த கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படுகிறது.


மருந்துகள்
நீங்கள் சாப்பிடும் சில மருந்துகள் இந்த நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் சில குறிப்பிட்ட மருநு்துகள் எடுத்துக் கொள்ளும்போது இந்த நீர் கோர்த்தல், வீக்கங்கள் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அல்லது அந்த குறிப்பிட்ட மருந்துகளை மாற்றச் சொல்லுங்கள்.


கால்களில் அடிபடுதல்
மூட்டுகளில் ஏற்படும் விபத்துகள் இதனால் கூட கால்களில் நீர்த்தேக்கம் ஏற்படலாம்.

வெரிகோஸ் வீன்ஸ் போன்றவற்றாலும் கூட, நீர் கோர்த்தல் ஏற்படும்.

MOST READ: உடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி?


சிறுநீரக பிரச்சினை
இதய நோய்கள் மற்றும் இரத்த ஓட்ட பாதிப்புகள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை

அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தல்


உணவில் உப்பை அதிகம் சேர்த்தல்.
எனவே இந்த நீர்த்தேக்எத்தை சரியாக கண்டு கொள்றவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இந்த நீர்த் தேக்கத்தை போக்க சில வீட்டு முறைகள் உள்ளன. அதையும் செய்து பார்க்கலாம்.


பெருஞ்சீரக டீ
பெருஞ்சீரக டீ இந்த நீர்த் தேக்கத்தை போக்க உதவுகிறது. இந்த டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சாப்பிட்டு 15 நிமிடங்கள் கழித்து எடுத்து கொண்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

தேவையான பொருட்கள்

1 டீ ஸ்பூன் பெருஞ்சீரகம் (5 கிராம்)

1/2 டீ ஸ்பூன் நட்சத்திர வடிவ பூ(3 கிராம்பு)

1 கப் தண்ணீர் (200 மில்லி லிட்டர்)

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து மேலே உள்ள பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவு‌ம்.

பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும்.


குதிரைவாலி மூலிகை டீ
நீர்த்தேக்கத்தை சரி செய்ய இது சிறந்தது. மருந்து கடைகளில் இது கிடைக்கிறது.

அடைபட்ட இரத்த ஓட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்கிறது.

இதிலுள்ள சிலிக்கான் சருமத்தை புதுப்பித்து பாதிக்கப்பட்ட திசுக்களை சரி செய்கிறது.

நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

எனவே நீர்த்தேக்கம் உள்ளவர்கள் இந்த டீயை காலையில் குடித்து வந்தால் நல்லது

No comments:

Post a Comment

Post Top Ad