நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை என்பது பலர் விரும்பக்
கூடிய விஷயமாக உள்ளது. பொதுவாக இகாரியா, க்ரீஸ், லோமா லிண்டா, கலிபோர்னியா,
சார்டினியா, இத்தாலி, ஒகினாவா, ஜப்பான், நிக்கோயா மற்றும் கோஸ்டாரிகா ஆகிய
பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அவர்களில்
அதிகமான மக்கள் தங்களின் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடுபவர்களாக
இருக்கின்றனர். எனவே நீண்ட ஆயுட்காலம் குறித்து பல காலமாகவே ஆராய்ச்சிகள்
நடைபெற்று வருகின்றன. பலரும் நீண்ட ஆயுளை பெற என்ன செய்ய முடியும் என
ஆலோசனை செய்து வருகின்றனர்.
நீண்ட ஆயுளைப் பெற
ஒரு
ஆராய்ச்சியாளர் இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். இந்த
பிராந்திய மக்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும்
என்னவெல்லாம் செய்கின்றனர் என்பது குறித்து அவர் ஆராய்ச்சி செய்தார்.
அப்பொழுது
இந்த சமூகம் குறைந்த புரதம் கொண்ட உணவிற்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள் எனத் தெரிந்தது. அவர்களது பல பழக்கவழக்கங்கள் காலையில்
எழுந்ததும் செய்யக் கூடியவையாக இருந்தன. அவை நீண்ட ஆரோக்கியத்திற்கு
வழிவகுப்பவையாக இருந்தன. எனவே நீண்ட ஆயுளைப் பெறுவதற்கான அந்த பயிற்சிகளை
இப்பொழுது பார்ப்போம்.
உங்களின் இக்கிகையை கண்டுபிடிக்கவும்
நீங்கள்
காலையில் எழுந்ததும் படுக்கையில் இருந்து உங்களை எழுப்புவது எது? உங்களை
இயக்குவது எது? இந்த மாதிரியான விஷயங்களை மேலே சொன்ன நாடுகளில் உள்ள மக்கள்
யோசிக்கின்றனர். அதில் முக்கியமான நாடு ஜப்பான்.
ஜப்பானில்
இக்கிகய் என்கிற ஒரு கருத்து உண்டு. நீண்ட நாள் மனிதர்கள் வாழ்வதற்கான பல
விஷயங்களை இக்கிகய் கூறுகிறது. இது நமது ஆத்மா மற்றும் வாழ்நாளுடன்
இணைக்கப்பட்டுள்ளது. நாம் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது இது
ஒரு ஆரம்பத்தை நமக்குத் தருகிறது.
இதை எப்படித்
துவங்குவது என உங்களுக்குத் தெரியாவிட்டால் இதுகுறித்து இக்கிகய் ஆசிரியர்
கூறும் போது இது உடலில் உள்ள ஐந்து தூண்களில் இருந்து இந்த நடவடிக்கை
துவங்குகிறது. உங்களை நீங்களே ஏற்றுக் கொள்வது. மற்றவர்களுடன் உங்களை
இணைத்துக் கொள்ளுதல் மற்றும் சிறிய விஷயங்கள் வழி மகிழ்ச்சியைக் கண்டறிவது
ஆகியவை இக்கிகய்யின் ஆரம்ப விஷயங்களாக உள்ளன.
ஆரோக்கியமான காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்
ஆரோக்கியமான
உணவு என்பது நீண்ட ஆயுளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாவர அடிப்படையிலான
உணவுகள் அல்லது மத்திய தரைக்கடல் உணவுகள் உங்கள் ஆரோக்கிய உணவிற்கான
பட்டியலில் இருப்பது மூலம் உங்கள் வாழ்க்கையை நீங்கள் நீண்ட ஆரோக்கியமாக
வாழ முடியும். அப்படியாக ஆரோக்கிய உணவுகள் உண்பது மட்டும் இன்றி உங்களது
காலை உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலை உணவுகள்
ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமாகும்.
கலிபோர்னியாவில்
உள்ள லோமா லிண்டாவில் வசிக்கும் 105 வயதுடைய ஒரு பெண் தினமும் காலை சமைத்த
ஓட்ஸ் சாப்பாட்டை உணவாக எடுத்துக் கொள்வதாக கூறுகிறார். ஆரோக்கியமான
பருப்புகள் மற்றும் புரத சத்து நிறைந்த சோயா பால் ஆகியவை ஒரு ஆரோக்கியமான
காலை உணவாக பார்க்கப்படுகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை
குறைக்க உதவுகிறது.
ஒரு கப் காபி
மேலே
சொன்ன ஐந்து நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் காலையில் ஒரு கப் காபியை
எடுத்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் காபி வரை
அவர்கள் குடிக்கின்றனர். அமெரிக்காவின் இதயம் குறித்த நிறுவனம் இதுகுறித்து
கூறும் போது காபியில் உள்ள காஃபினேட் மற்றும் டிகாஃப் இரண்டுமே
இறப்புக்கான ஆபத்தை குறைக்கும் திறன் கொண்டது எனக் கூறுகின்றனர்.
ஆனால்
உங்கள் கோப்பை காபியில் இனிப்பு கட்டிகளை அதிகம் சேர்க்க வேண்டாம். அதற்கு
பதிலாக வேறு ஆரோக்கியமான பொருட்களை காபியில் சேர்க்கலாம். தாவர
அடிப்படையில் உருவாகும் பாலில் காபி செய்து குடிப்பது உடலுக்கு நன்மை
பயக்கும். அல்லது ஒரு கப் காபிக்கு பதிலாக தேநீரை சேர்க்கலாம். இந்த
நாடுகள் முழுவதும் காபி அல்லது தேநீரானது பிரதான பானமாக உள்ளது.
இவர்கள்
தங்கள் உறவினர்கள், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் காபி மற்றும்
தேநீர் அருந்துகின்றனர். தேநீர் அரட்டை அடிக்கவும், சிரிக்கவும், உடல்நலம்
மற்றும் மகிழ்ச்சி இவை அனைத்திற்கும் உதவுகிறது.
முதலில் பார்க்கும் நபரிடம் நல்லதைப் பேசுங்கள்
நமது
நாள் எப்போதும் நல்லபடியாக துவங்க வேண்டும் எனப் பெரியவர்கள் கூறக்
கேட்டிருப்போம். எனவே நமது காலை நேரத்தை நாம் இனிமையாக துவங்குவதன் மூலம்
நமது நாளை நாம் நல்லப்படியாக அமைக்க முடியும். முதலில் ஆரோக்கியமான காலை
உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். (பழங்கள் மற்றும் தானியங்கள் நல்ல
பலனளிக்கக் கூடியவை). பிறகு 20 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இதோடு
இல்லாமல் காலையில் நாம் பார்க்கும் முதல் நபரிடம் நல்ல வார்த்தைகளைப் பேச
வேண்டும். அவரைப் பாராட்ட வேண்டும். நீங்கள் அப்படி உங்கள் அயல்
வீட்டுக்காரரிடம் நல்ல வார்த்தைகளைக் கூறும் போது உங்களுக்கும் அது திரும்ப
வரும். எனவே நீங்களும் காலையில் நல்ல வார்த்தைகளைக் கேட்பீர்கள்.
சமூகத்துடன்
நமக்கு இருக்கும் ஆரோக்கியமான உறவும் முக்கியமானது ஆகும். எனவே
ஆரோக்கியமான சமூக வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள். காலையில்
மட்டுமின்றி நாள் முழுவதும் முடிந்த அளவு நல்ல வார்த்தைகளை மட்டும்
பயன்படுத்தலாம். இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனுக்கு நீண்ட ஆயுளுக்கு
வழிவகை செய்கிறது.
Live casino site - LuckyClub
ReplyDeleteLive casino site. · LuckyClub luckyclub.live · LuckyCasino · Casino. · Casino. · Casino. · Casino. · Casino. · Casino. · Casino. · Casino. · Casino.