அரசு சேவை இல்லப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Friday, 5 June 2015

அரசு சேவை இல்லப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்:

தஞ்சாவூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் விதவைகள், ஆதரவற்றோர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் 14 வயது முதல் 45 வயது வரையுள்ள மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 24,000-க்குள் உள்ள விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மகளிர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மகளிர் ஆகியோருக்குப் பொதுக் கல்வி (6 முதல் 12-ம் வகுப்பு வரை) தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளியில் சேரும் மாணவிகளுக்கு உணவு, உடை, உறைவிடம், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் ஆகியவை அரசு இலவசமாக வழங்குகிறது. ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள 6, 9, 11-ம் வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 04362 - 255287. 258501 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad