21 போலி பல்கலையு.ஜி.சி. கண்டுபிடிப்பு: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Friday, 5 June 2015

21 போலி பல்கலையு.ஜி.சி. கண்டுபிடிப்பு:

நாடு முழுவதும் 21 போலி பல்கலைகள் செயல்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.பல பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. அமைப்புகளின் விதிகளை பின்பற்றாமல் உரிய அங்கீ காரமும் பெறாமல் செயல்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன.மேலும் பல படிப்புகளும் அனுமதியின்றி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யு.ஜி.சி. விசாரணை நடத்தி போலி பல்கலைகளை அடையாளம் கண்டறிந்துள்ளது. 21 போலி பல்கலைகள் செயல்படுவது தெரியவந்து உள்ளது.இதன் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டு உள்ளது. போலி பல்கலைகளின் விவரங்களை http:/www.ugc.ac.in/page/Fake-Universities.aspx என்ற இணையதள இணைப்பில் பெறலாம்

No comments:

Post a Comment

Post Top Ad