தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டபடிப்புகளான பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச், பி.டெக்-உணவு தொழில் நுட்பம், பி.டெக்-பால்வளத் தொழில்நுட்பம் மற்றும் பி.டெக் கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகியவற்றில் சேர்க்கைக்கென கடந்த மே மாதம் 17-ந்தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட படிப்புகளுக்கு இதுவரை 18,738 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்) படிப்பில் சேர 13,255 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பங்கள் வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்குள்ளாக பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment