100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்டது: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 3 June 2015

100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்டது:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
100 அடி உயரம்
தேசிய கொடி பொதுவாக பகலில் மட்டுமே பறக்கவிடப்படும். மாலை 6 மணிக்கு அரசு அலுவலகங்களில் பறக்கும் தேசிய கொடிகள் இறக்கப்படும். ஆனால் இரவிலும் தேசிய கொடிகள் பறப்பதற்கு சில இடங்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது.இதுபோல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தேசிய கொடி பறக்கும் வகையில் 100 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில் 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான மூவர்ண தேசிய கொடியை விமான நிலைய இயக்குனர் தீபக் சாஸ்திரி நேற்று ஏற்றிவைத்தார்.
இந்த தேசிய கொடி பகல்–இரவு என 24 மணி நேரமும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.
7–வது விமான நிலையம்
இதுபற்றி விமான நிலைய இயக்குனர் தீபக் சாஸ்திரி கூறியதாவது:–
இந்தியாவில் 78 இடங்களில் இரவு–பகல் பறக்கும் வகையில் தேசிய கொடி அமைக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா, கவுகாத்தி, வாரணாசி, ஜம்மு, ஸ்ரீநகர், ஆமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் இதுபோல் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு உள்ளன. 7–வது விமான நிலையமாக சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கக் கூடியவகையில் இந்த தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம், தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடிகள் உள்ளன. தமிழகத்தில் 3–வது இடமாக சென்னை விமான நிலையத்தில் இது அமைக்கப்பட்டு உள்ளது.
தேசிய கொடி ஏற்றும், இறக்கும் பணிகள் தானியங்கி கருவிகள் மூலம் செயல்படுத்தப்படும். தேசிய கொடி சேதம் அடையாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad