உங்களுக்கு தெரியுமா? ஒரு சில மாத்திரைகளில் மட்டும் கோடு இருப்பதற்கான காரணம் என்ன? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 7 July 2021

உங்களுக்கு தெரியுமா? ஒரு சில மாத்திரைகளில் மட்டும் கோடு இருப்பதற்கான காரணம் என்ன?

 
ஒரு சில மாத்திரைகளில் மட்டும் கோடு இருப்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

நாம் பொதுவாக பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளில் நடுவே ஏன் கோடு இருக்கும். ஆனால் சில மாத்திரைகளில் இருக்காது.. அதே போல் கேப்ஸ்யூல் வடிவில் ஒரு சில மாத்திரைகள் இருக்கும்.. இதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணங்களை தெரிந்து கொள்ளலாம்..

முதலில் மாத்திரைகு நடுவே ஏன் கோடு போடப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.. உதாரணமாக ஒரு மாத்திரை 100 mg என்ற கணக்கில் இருந்தால், கோடு போட்ட மாத்திரையில் 50mg வலப்பக்கமும் 50mg இடப்பக்கமும் இருக்கும். இந்த கோடுபோட்ட மாத்திரைகளை தான் Adjustable tablet என்று கூறுவார்கள்.. இப்படி கோடு போட்ட மாத்திரையை தான் பாதியாக உடைத்து நாம் சாப்பிட வேண்டும். கோடு போடாத மாத்திரைகளை நம்மால் உடைத்து சரியான கணக்கில் உள்ளுக்கு சாப்பிட முடியாது.

சாப்பிடவும் கூடாது. கோடு போடாத மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது அவ்வளவு சரியான முறை அல்ல. மாத்திரைகளில் நடுவே கோடு போடப்பட்டுள்ளதற்கு இதுதான் காரணம்..

நாம் சாப்பிடும் மாத்திரை வகைகளில் கேப்சூல் வடிவில் ஒரு சில மாத்திரைகள் இருக்கும். கேப்சூல் என்று மாத்திரையின் மேலே போடப்படும் கவர், ஜெலட்டின் ஆல் செய்யப்பட்டது. இந்த கேப்ஸ்யூல் மாத்திரைகளிலும் இரண்டு வகை உண்டு. பிளாஸ்டிகில் இருக்கக்கூடிய கேப்ஸ்யூல், ரப்பர் வகையில் இருக்கக்கூடிய கேப்ஸ்யூல், இரண்டுமே ஜெலட்டின் வகைதான்.

ஆனால் பிளாஸ்டிக் வகைகளில் பவுடர் போன்ற மருந்து வகைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதாவது மேலே ஒரு கேப்ஸ்யூல் மூடி, கீழே ஒரு கேப்ஸ்யூல் மூடி போட்டு உள்ளே மருந்து பவுடரை வைத்து இருப்பார்கள். ரப்பர் போன்ற கேப்ஸ்யூல் உள்ளே லிக்விட் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஏன், இந்த மருந்துகளை மாத்திரையாகவே தயாரித்து கொடுக்க கூடாது? ஏன் கேப்ஸ்யூலில் போட்டு கொடுக்கின்றார்கள்?

இதற்கும் காரணம் உண்டு. மாத்திரைகள் நம் உடலுக்குள் சென்று கரைந்து வேலை செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் கேப்ஸ்யூல் அப்படி கிடையாது. நம் வயிற்றுக்குள் சென்ற உடனேயே கரைந்து தனது வேலை செய்ய தொடங்கி விடும். உடலுக்கு சென்று உடனடியாக வேலை செய்ய வேண்டும் என்ற மருந்து வகைகளை மட்டுமே கேப்ஸ்யூல் ஆகத்தான் கொடுப்பார்களாம்.


No comments:

Post a Comment

Post Top Ad