உடலுக்கு நன்மை பயக்கும் நாட்டுக்கோழி மிளகு ரசம் செய்வது எப்படி? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 7 July 2021

உடலுக்கு நன்மை பயக்கும் நாட்டுக்கோழி மிளகு ரசம் செய்வது எப்படி?ரசம் என்றாலே தனி சுவை தான். அதிலும் நாட்டுக் கோழி மிளகு ரசம் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நாட்டுக் கோழி மிளகு ரசம் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றது. தவிர, உடலில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு இவை ஒரு அருமருந்து உள்ளன.

இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ள நாட்டுக் கோழி மிளகு ரசத்திற்கான செய்முறையை இங்கு பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதைகள்- 2 கைப்பிடி

சீரகம்- 1 கைப்பிடி

பெருஞ்சீரகம் (அ) சோம்பு - 3/4 கைப்பிடி

மிளகுத்தூள்- 1/2 ஒரு கைப்பிடி

வெங்காயம் -1

தக்காளி- 3

பூண்டு- 2

இஞ்சி- 1 துண்டு (2 அங்குல அளவு)

நல்லெண்ணெய்- 40 மில்லி

நாட்டு கோழி கறியுடன் கூடிய எலும்புகள்- 500 கிராம்

கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்- 1 கொத்து

உப்பு- சுவைக்கேற்ப

மஞ்சள்- 2 டீ ஸ்பூன்

மிளகாய் தூள்- 3/4 டீஸ்பூன்

அண்ணாச்சி பூ, பட்டை, கிராம்பு - சிறிதளவு.


செய்முறை:


நாட்டுக் கோழி மிளகு ரசம் நாம் தயார் செய்ய நமக்கு முதலில் தேவையானது அதற்கான மசாலா.


எனவே கொத்தமல்லி, சீரகம், சோம்பு மற்றும் மிளகு ஆகிய அனைத்தையும் ஒன்றாக ஒரு உரலில் வைத்து நன்றாக இடித்துக்கொள்ளவும். பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை அதே உரலில் வைத்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாய் அல்லது மண்சட்டி எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் அண்ணாச்சி பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

அதன் பிறகு முன்பு தாயார் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். தொடர்ந்து கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து சில வினாடிகளுக்கு வதக்கி கோழிக் கறியுடன் கூடிய எலும்புகளை சேர்த்துக் கிளறவும்.

அதனைத் தொடர்ந்து மஞ்சள் - மிளகாய் பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு கொத்தமல்லி தழைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி சுமார் 30 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். அவை நன்கு கொதித்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கீழே இறக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாட்டுக் கோழி மிளகு ரசம் தயராக இருக்கும். இதை நீங்கள் பரிமாறி சுவைக்கலாம்.

1 comment:

  1. Harrah's Hotel and Casino - Jackson, MS - JCMH Hub
    The resort offers 진주 출장마사지 the perfect experience for travelers visiting Mississippi. Our casino 영주 출장마사지 features a wide range of table games and 원주 출장샵 a wide 서귀포 출장안마 variety 청주 출장샵 of table games.

    ReplyDelete

Post Top Ad