குப்பைமேனி இலை எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகிறது...? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 27 July 2020

குப்பைமேனி இலை எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாகிறது...?


♦♦குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர சிரங்கு மற்றும் உடல் அரிப்பு நீங்கி சருமம் பொலிவுபெறும்.

♦♦குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது வைத்து கட்டினால் எந்த வகையான புண்ணும் குணமாகும்.மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.

♦♦குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.

♦♦குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
♦♦பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி (Facial) வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகமும் அழகும் பெறும்.

♦♦பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.

♦♦குப்பைமேனி இலையை கடாயில் போட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் படுக்கைப் புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.

♦♦குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர முகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

♦♦குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 1/2 ஸ்பூன் அளவு தேனில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள், குடல் புழுக்கள் வெளியேறும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

♦♦குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு பெரியவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

♦♦குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.

♦♦குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

♦♦10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் மற்றும் கிருமிகள் வெளியேறும்.

♦♦குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக பருக குடலிலுள்ள பூச்சிகள் அழியும்.

♦♦தலை பாரத்தால் ஏற்பட்ட தலைவலி குணம் பெற குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்து அந்த பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைபாரம் உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர்.

♦♦குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு  எண்ணெயில் வதக்கி இளஞ் சூட்டுடன் மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும், வாத வலி உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வாத வலி தீரும்.

♦♦குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

♦♦குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சினால் உப்பு மட்டும் மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வாயு, அஜிரணம் மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்து.

♦♦குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும்.

♦♦குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும்.

♦♦குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட எல்லா வகையான கடியின் விஷமும் முறியும். இந்த சமயத்தில் வாந்தியும் பேதியும் உண்டாக்கும். (உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)


♦♦மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

♦♦குப்பைமேனி இலையை அல்லது வேரை கைப்பிடியளவு எடுத்து சீரகம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும்.

♦♦குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.

♦♦மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் (பொடி) செய்து இதில் 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் கலந்தும் சாப்பிடலாம். புளி,காரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

♦♦குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

♦♦குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும்.

♦♦கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும்.

♦♦9 குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

♦♦குப்பைமேனி இலைச்சாற்றை 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வர சுவாச நோய்கள் குணமாகும்.

♦♦குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறைவது நன்றாக தெரியும்.

♦♦குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad