உங்கள் கால்களை வலுவாக வைத்திருங்கள்!
நாம் வயதாகும்போது, நம் கால்கள் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும்.
நாம் வயதாகும்போது, நம் தலைமுடி சாம்பல் நிறமாக மாறும். தோல் தொய்வு பெறும். தோல் சுருக்கங்கள் உருவாகும். இவற்றைக் கண்டு பயப்படக்கூடாது.
நீண்ட ஆயுளுக்கான அறிகுறிகளை "Prevention" என்ற அமெரிக்கப் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. அதில் வலுவான கால் தசைகள் முதலாவதாக குறிப்பிப்பட்டுள்ளது.
நீண்ட ஆயுளுக்கு வலுவான கால்கள் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும்.
நீங்கள் இரண்டு வாரங்களுக்கு உங்கள் கால்களை நகர்த்தாவிட்டால், உங்கள் காலின் வலிமை 10 ஆண்டுகள் குறைந்து விடும்.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் ஆய்வில், வயதானவர்களும் இளம் வயதினரும் இரண்டு வாரங்களுக்கு செயலற்று இருந்தால், கால்களின் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையக்கூடும். இது 20-30 வயது அதிகமாவதற்குச் சமமானதாகும்.
நம் கால் தசைகள் பலவீனமடைந்தால், கடுமையான உடற்பயிற்சிகள் செய்தாலும், அவை மீண்டும் வலுவடைய மிக நீண்ட காலம் எடுக்கும்.
எனவே, நடைப்பயிற்சி அல்லது மெல்லோட்டம் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை.
நம் முழு உடல் எடையையும் / சுமையையும் நம் கால்கள்தாம் தாங்கி நிற்கின்றன.
கால்கள் என்பவை மனித உடலின் எடையைத் தாங்கும் ஒரு வகையான தூண்கள்.
ஒரு நபரின் எலும்புகளில் 50 சதவீதமும் தசைகளில் 50 சதவீதமும் இரண்டு கால்களிலும் உள்ளன.
மனித உடலின் மிகப் பெரிய, வலிமையான மூட்டுகளும் எலும்புகளும் கால்களில்தாம் உள்ளன.
"வலுவான எலும்புகள், வலுவான தசைகள், நெகிழ்வான மூட்டுகள் - இரும்பு முக்கோணத்தை உருவாக்குகின்றன. அவை மனித உடலில் மிக முக்கியமான சுமையைச் சுமக்கின்றன."
ஒருவரது வாழ்க்கையில் 70% மனித செயல்பாடுகளும் 70% ஆற்றலை எரிப்பதும் இரண்டு கால்களால் மட்டுமே செய்யப்படுகின்றன.
இது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய தொடைகள் ஒரு சிறிய காரைத் தூக்க போதுமான பலங்களைக் கொண்டுள்ளன!
உடலின் மொத்த இயக்கங்களின் மையம் கால்கள்தாம்!
மனித உடலின் நரம்புகளில் 50 சதவீதமும் இரத்த நாளங்களில் 50 சதவீதமும் நம் இரு கால்களும் கொண்டுள்ளன. அவற்றின் வழியாக உடன் 50% இரத்தம் பாய்கின்றன.
இது முழு உடலையும் இணைக்கும் பெரிய சுற்றோட்ட வலையமைப்பு.
பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்தத்தின் மின்னோட்டம் சீராக ஓடுகிறது. எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும்.
மனித உடலின் வயது மூப்பு கால்களிலிருந்து மேல்நோக்கி தொடங்குகிறது.
ஒரு நபர் வயதாகும்போது, அவர் இளமையாக இருந்தது போலல்லாமல், மூளைக்கும் கால்களுக்கும் இடையில் செய்திகளைப் பரப்புவதற்கான துல்லியமும் வேகமும் குறைகின்றன.
கூடுதலாக, எலும்பு உர கால்சியம் என்றழைக்கப்படுவது விரைவிலோ அல்லது தாமதமாகவோ காலப்போக்கில் இல்லாமலாகும். இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாக நேரிடும்.
முதியவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களை எளிதில் தூண்டும். குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற அபாயகரமான நோய்கள் உருவாகும்.
தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள் 15% வயதான நோயாளிகள் இறந்துவிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
60 வயதிற்குப் பிறகும் கால்களுக்கு உரிய பயிற்சிகள் எடுப்பது என்பது ஒருபோதும் தாமதமாகாது.
நம் கால்களுக்கும் படிப்படியாக காலப்போக்கில் வயது மூப்பு ஏற்படும் என்றாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டிய பணியாகும்.
கால்களை வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதாவதைத் தடுக்க முடியும்.
கால்கள் போதுமான உடற்பயிற்சியைப் பெறுவதை உறுதி செய்யவும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாகவும் நெகிழ்வாகவும் இருப்பதை உறுதி செய்யவும் தினமும் குறைந்தது 35-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
இதை வயதான நண்பர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுத்து அவர்களின் கடைசி மூச்சு வரை நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்திட முடியும்.
No comments:
Post a Comment