உடலின் முக்கிய தேவை
- பிராண வாயு
கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் மனதை உலுக்குகின்றன.
அனைவருக்கும் இந்த செய்திகள் மனதில் கிலியை ஏற்படுத்துகின்றன.
நோய் என்பது தவிர்க்க முடியாதது. எது எப்போது வரும் - யாருக்கும் வரும் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது.
தற்போதைய வைரஸ் பற்றிய தெளிவான சிந்தனை உலகில் உள்ள தேர்ந்த மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இன்னும் கிடைக்கவில்லை.
இதனை தவிர்ப்பதற்கு இப்போது கைவசம் உள்ள கவசங்கள் இவை தான்:
01. முகமூடி அணிந்து கொண்டு, மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுதல். இதன் மூலம் வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைவதை தடுக்கலாம்.
02, எதிரில் உள்ள அல்லது அடுத்து உள்ள மனிதர்களிடம் இருந்து இடைவெளி விட்டு அமர்தல் அல்லது நிற்றல்.
03. கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுதல். அதாவது பல இடங்களுக்கு சென்று விட்டு வரும்போது, கை விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் வைரஸ் கிருமிகளின் துணுக்குகளை வெளியேற்றுவதற்குண்டான ஏற்பாடு இது.
இது தவிர தற்போது கிடைக்கும் தடுப்பூசிகள். தடுப்பூசிகள் பலன்கள் கிடைப்பதற்கு குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும்.
தற்போது, இந்த வைரஸ் நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் பிராண வாயு கிடைக்காமல் அவதிப்படுவது தான் மனதை நெருடுகிறது.
அதாவது அவர்களுக்கு செயற்கையாக இது தேவைப்படுகிறது.
இதற்காக பிராண வாயு குழாய்களின் மூலம் மூக்கு துவாரங்கள் மூலம் செலுத்தப்படுகின்றன.
அந்த பிராண வாயு சிலிண்டர்களுக்காக மக்கள் அல்லாடுவதை பார்ப்பதற்கு மனது கஷடமடைகிறது.
*சரி பிராண வாயு எப்படி கிடைக்கிறது ?
எங்கு கிடைக்கிறது?*
01. நம்மை சுற்றி இருக்கும் அணைத்து இடங்களிலும் இருந்து கிடைக்கிறது. அதாவது தாவரங்கள் மற்றும் மரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. மனிதர்களின் தேவைக்கு மிகவும் அதிகமாகவே உள்ளன. பிரச்சினை என்னவென்றால் - அதனை உடல் ஏற்றுக்கொள்ளும் திறனை நுரையீரல்கள் தற்காலிகமாக இழந்து விடுவது தான்.
02. பிராண வாயு அதிகம் கிடைப்பதற்கு - மூச்சு பயிற்சி அதிகம் செய்யலாம். இதன் மூலம், நுரையீரலின் சக்தி வலுவடையும். கொள்ளளவு கூடும்.
03. காற்றோட்டமான இடங்களில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.
04. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்கலாம்.
05. இது மட்டும் அல்லாமல், தண்ணீர் மூலம் பிராண வாயு நமது உடலின் உள்ளே சென்று கொண்டு இருக்கிறது. அதனால் தான் சொல்லுகிறார்கள். இந்த நேரத்தில், அதிக அளவு நீர் சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று. இந்த அதிகப்படியான நீர், பிராண வாயுவின் அளவை கூட்டுவது மட்டும் அல்லாமல், வைரஸின் வேகத்தை மட்டுப்படுத்தும்.
06. கத்திரிக்காய், குடை மிளகாய் போன்றவற்றில் பிராண வாயு அதிகம் உள்ளது. கத்திரிக்காய், குடை மிளகாய் – உணவில் சேர்க்கும்போது, உணவுடன் இந்த பிராண வாயு ரத்தத்தில் கலந்து விடுகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் நாம் செய்யவேண்டியது.
01. பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது;
02. உணவில் நீர் சத்து அதிகம் உள்ள பழங்களை உண்ணுவது;
03. நீர் சத்து அதிகம் உள்ள காய் கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுவது.
04. காற்றோட்டமான இடங்களில் தேவையான அளவு உறக்கம் மேற்கொள்ளுவது.
05. தேவையான அளவு உடற்பயிற்சி செய்வது.
ஆரோக்கியம் காப்போம்.
Thursday, 6 May 2021
Home
health tips
உடலின் முக்கிய தேவை - பிராண வாயு கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் மனதை உலுக்குகின்றன.
உடலின் முக்கிய தேவை - பிராண வாயு கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் படிக்கும் செய்திகள் மனதை உலுக்குகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment