
ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என
கேள்விப்பட்டிருப்போம். அதனை எத்தனை பேர் இன்று கடைப்பிடிக்கிறோம் என்பது
கேள்விக் குறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது உடலுக்கு நன்மை
பயக்கும் அதிலும் குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து
காக்கும்.

சிபிஆர் என்ற இதய நோய்க்கு பல ஆண்களும் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் வாயில் உள்ள கிருமிகள் தான்.
சிபிஆர் இருப்பது மிக ஆபத்து நிறைந்தது என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
மேலும் பல் சரியாக துலக்காததால் வாயில் பாக்டீரியா தொற்று உருவாகிறது.
ஈறுகளில் தொற்று, பல் சொத்தை, பல் சேதம் ஆகியவை ஏற்ப்பட்டு பல் இல்லாமல்
போகும் இடங்களில் பாக்டீரியா தொற்று இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் பரவ
ஆரம்பிக்கிறது.
பல் சிதைவு அபாயம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல.
சிறுவயது முதலே இந்த பிரச்சனை ஏற்ப்படுகிறது. மழலையர் பள்ளிக்கு செல்லும்
40 சதவீத குழந்தைகள் இவ்வித நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வயது
முதலே உடலில் சுகாதார பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது. வாய் துர்நாற்றம்,
இர்த்தகசிவு என பற்களில் பலவித நோய்கள் ஏற்ப்படுகிறது.
இதனை தடுக்க
சிறந்த வழி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது தான். பெரியவர்கள்
செய்வதை பார்த்த குழந்தைகளுக்கும் இது பழக்கமாகி விடும். காலை இரவு இரண்டு
வேளையும் இரண்டு நிமிடங்கள் வரை பல் துலக்குங்கள். சுத்தமான நீரில் வாய்
கொப்பளியுங்கள். அதிகமாக பல் துலக்குவதும் பல் ஈறுகளை பலவீனப்படுத்தி பல்
கூச்சம் போன்றவற்றை ஏற்ப்படுத்தும்.
குழந்தைகளை சிறுவயது முதலே பல்
துலக்க வைத்து கண்காணியுங்கள். சிறு வயதில் அவர்கள் கற்பதே வாழ்நாள்
முழுவதும் கடைப்பிடிக்கப்படும். குழந்தைகளுக்கு பிடித்த பற்பசையை வாங்கி
ஆடல் பாடலுடன் இரண்டு நிமிடங்கள் வரை தினமும் பல் துலக்க வையுங்கள்.
பல்லின் ஆரோக்கியம் தான் சிறந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
ஒரு பிரகாசமான புன்னகையும் எதையும் எதிர்க் கொள்ளும் மன உறுதியையும்
கொடுக்கிறது.
No comments:
Post a Comment