முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் கண் பார்வை குறைபாடு, கண்
தொடர்பான பிரச்சனைகள் வரும். ஆனால் இப்போது உணவில் போதிய ஊட்டச்சத்து
இல்லாததாலும் தொலைக்காட்சி, செல்போன், லேப்டாப் என அதிகம் பயன்படுத்தும்
பொருட்களாலும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குழந்தைகளுக்கு கூட
விரைவில் வந்துவிடுகிறது.
இதற்காக கண்ணாடி அணிக்கிறோம்.
மருத்துவ சிகிச்சை பெறுகிறோம். ஆனால் இது நிரந்தர தீர்வு
இல்லை என்பது நமக்கு தெரியும். இயற்கையில் கிடக்கும் உணவுகள் தான் நிரந்தர
தீர்வு. கண் தொடர்பான பிரச்சனையை போக்க உதவும் இயற்கை தீர்வு வல்லாரைக்
கீரை. இதனை எப்படி சாப்பிடலாம் என பார்க்கலாம்.
- முதலில் நாட்டு மருந்து கடைகளில் வல்லாரைக் கீரை பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.
- பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து அதோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு மிதமான சூட்டில் பால் அல்லது ஒரு டம்ப்ளர் மோர் எடுத்து இந்த கலவையை கலந்து தினமும் ஒரு முறை என 10 நாட்கள் குடித்து வாருங்கள்.
- 10 நாட்களுக்கு பின்பு மாதம் இரு முறை குடிக்க வேண்டும்.
இவ்வாறு
செய்வதால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் எளிதில்
விடுபடலாம். அனைத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கு செல்லாமல் இயற்கை
உணவுகளில் மகத்துவத்தை அறிந்து உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுங்கள்.
No comments:
Post a Comment