அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும்..?? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 5 July 2020

அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும்..??


 எல்லோருக்கும் எல்லாமும் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.
* ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

* ஆனால், டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்.

* பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.

* ஆனால், INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி, அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

*ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.*

22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்.

* எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயது வரை வாழ்க்கை வரலாறு. அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.*

* கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை.

* சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.

* பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.

* டால்ஸ்டாய் தனது 82 வது வயதில் I Cannot Be Silent என்றார்.

* வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான். எனவே, உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால், அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.

உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

யார் கண்டது, ?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!

இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!

எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...

இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்.

அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் .

ஆனால், ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.

*இது தான் வாழ்க்கை..!*
*இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே..*
*மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்..!!*

*💗வாழ்க வளமுடன்💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

No comments:

Post a Comment

Post Top Ad