பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 20 May 2021

பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?


குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது அவர்களுக்கு பசியின்மை ஏற்படுகிறது. மற்ற உணவுகளைச் சாப்பிடுவதை குழந்தைகள் தவிர்த்து விடுவார்கள்.

சாதாரண பிஸ்கட்டுகளுடன் ஒப்பிடுகையில், கிரீம் பிஸ்கட்டுகள் இன்னும் ஆபத்தானவை ஆகும். கிரீம் பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் ஃப்ளேவர்கள் மற்றும் நிறங்கள், முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. அதன் சுவைக்காக சுக்ரோஸ் அதிகமுள்ள வெள்ளைச் சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லாருடைய உடம்பிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

உப்பு சேர்க்கப்படும் பிஸ்கட்டுகளில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் போது, குழந்தைகளுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

பிஸ்கட்டுகள் மைதா மாவில் தயார் செய்யப்படுவதால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைக்கு ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடும் போது, உடலில் கொழுப்புச்சத்து அதிகரித்து, குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்பட ஆரம்பிப்பார்கள். செரிமானக் கோளாறுகளும்  ஏற்படலாம்.

சில பிஸ்கட் பாக்கெட்டுகளில், சுகர் ஃப்ரீ பிஸ்கட்டுகள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் இந்த பிஸ்கட்டுகளில் சுக்ரோஸ் நிறைந்த சர்க்கரை சேர்த்திருக்க  மாட்டார்கள். ஆனால், அதன் சுவைக்காக சுகர் ஃப்ரீ மாத்திரைகள், சோள மாவு, சுகர் சிரப் போன்றவை சேர்க்கப்பட்டிருப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவைக் குறைப்பதோடு, கல்லீரல் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

 குழந்தைகளுக்கு இயற்கை உணவு அல்லது வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடக் கொடுப்பதே ஆரோக்கியத்தை கொடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad