
இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ்
இளநீருக்கு எண்ணற்ற நல்ல குணங்கள்
உண்டு. இயற்கையின் ஆரோக்கிய உணவு இது. இதனைப் போன்று சியா விதைகளும். இந்த
சிறிய விதையில் நார்சத்து, புரதம், நோய் எதிர்ப்பு சக்திகள் கொட்டிக்
குவிந்துள்ளது. சியா விதைகள் உடல் வீக்கத்தினைக் குறைக்கும். சர்க்கரை
அளவினைக் கட்டுப்படுத்தும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கும்
தன்மைகள் உண்டு.
தேவையான பொருட்கள்
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை
அனைத்தினையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
இதனை 10-15 நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து குடிக்கவும்.
சூப்பரான இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ் ரெடி.
இதனை தொடர்ந்து தினமும் (அ) வாரம் மூன்று முறை குடிக்கலாம். ஆனால் மிக அதிக அளவில் உட்கொண்டால் வயிறு கோளாறு ஏற்படும்.
No comments:
Post a Comment