'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 3 July 2020

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!

latest tamil news
கோவை: வயது வேறுபாடின்றி கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநில அளவில் மட்டுமின்றி கோவை மாவட்ட அளவிலும் புள்ளிவிபரங்களை ஒப்பிடும் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனையில், கடந்த மார்ச் முதல் இதுவரை, 874 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 608 பேர் கோவையை சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.

மாநில அளவில் ஒப்பிடுகையில், 0 முதல் 12 வயதுடையவர்களில், 2,607 பேர் ஆண் குழந்தைகள். 2,446 பேர் பெண் குழந்தைகள்.அது போலவே, 13 முதல் 60 வயது வரையுள்ளவர்களில், 52,797 பேர் ஆண்கள்; 32,486 பேர் பெண்கள். 22 மூன்றாம் பாலினத்தவர்.60 வயதுக்கு மேல் 7,612 பேர் ஆண்கள். 4,751 பேர் பெண்கள் உட்பட, 12,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பிரிவின் கீழும் ஆண்களுக்கே, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்கள் அதிகமாக பயணம் செய்வதாலும், புகைப்பிடிப்பதாலும் எளிதாக தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, பாதிக்கப்பட்ட ஆண்கள் மூலமாகவே, பெரும்பாலான பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டத்தில், 608 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதில், 318 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் அதிகமாவதற்கும், இறப்புக்கும் வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கிய காரணம் என கூறலாம்.
- ரமேஷ்குமார்
சுகாதாரத்துறை துணை இயக்குனர்.

No comments:

Post a comment

Post Top Ad