படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.கர்ம காலம் முடியும் வரை எதன்னாலும் நம்மை கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday, 11 July 2020

படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.கர்ம காலம் முடியும் வரை எதன்னாலும் நம்மை கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் !


படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.

இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது !

பயம் கவலைகளை விட்டு நம்மதியாக வாழுங்கள் ! கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும் ! பிரசித்தி பெற்ற ஆரூடம் நினைத்தால் கூட, உன்னை காப்பாற்ற முடியாது !

கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை ! ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் !

மகாபாரதத்திலும் இதற்கான உதாரணம் உண்டு ! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சத் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் சூட செய்த மாலையில் இருந்த பூவிலிருந்தோ, உண்ணவிருந்த பழத்திலிருந்தோ, வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி, உயிரிழந்தார் !

அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதன்னாலும் நம்மை கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் ! அமைதியும் ஆனந்தமும் என்றென்றும் நம்முடன்.

No comments:

Post a comment

Post Top Ad