இதுதான் விதியோ விதியின் சதியோ?யாரோ அழகாக எழுதியது. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 12 July 2020

இதுதான் விதியோ விதியின் சதியோ?யாரோ அழகாக எழுதியது.


★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.

★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.

★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.

★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.

★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.
★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.

★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.

★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.

★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.

கடைசியாக ஒன்று..

★நம்முடன் வாழ்ந்து  இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.

No comments:

Post a comment

Post Top Ad