அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஓராண்டு நீட்டிப்பு: கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 24 June 2020

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஓராண்டு நீட்டிப்பு: கொரோனா சிகிச்சையும் சேர்ப்பு :

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், கொரோனா பாதிப்புக்கும் சிகிச்சை பெற, அரசு வழிவகை செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு, 2016ல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு முதல், 2020 ஜூன், 30 வரை, நான்கு ஆண்டுகளுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், யுனைடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, ஒவ்வொரு ஊழியருக்கும் காப்பீட்டு தொகையாக, 2,100 ரூபாய், அரசு சார்பில் செலுத்தப்பட்டது.
இதற்காக, ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து, மாதத்திற்கு, 180 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.மருத்துவ காப்பீட்டு திட்டம், வரும், 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, திட்டகாலத்தை நீட்டிக்கும்படி, நிதித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசின் கோரிக்கையை ஏற்று, இன்சூரன்ஸ் நிறுவனமும், காப்பீட்டு காலத்தை நீட்டிக்க சம்மதித்தது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, 1 முதல், 2021 ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், 7.50 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சை பெற முடியும்.புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கொரோனா பாதிப்புக்கான சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மேலாண் இயக்குனர் உமாநாத் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.இக்குழு கூடி, கொரோனா சிகிச்சைக்கு, அதிகபட்ச கட்டணத்தைநிர்ணயம் செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி, 'ஏ1, ஏ2' தர மருத்துவமனைகளில், தனி அறை வசதியுடன், தினசரி,9,500 ரூபாய்; 'ஏ3-, ஏ6' தர மருத்துவமனைகளில், தினசரி கட்டணமாக, 7,500 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டால், தினசரி, 8,500 ரூபாய்; வென்டிலேட்டர் பொருத்தாமல், சிகிச்சை அளிக்கப்பட்டால், தினசரி, 6,500 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் பெற முடியும்.

அதேபோல, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டால், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். இதற்கான அரசாணைகளை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad