வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 24 June 2020

வருமானவரி தாக்கல் செய்ய மற்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு :

images%252878%2529

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad