ஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது ?? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

 Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 24 May 2020

ஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது ??


ஏன் விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது ??

காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண் தான்.

இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே தூக்கம் அவர்களது முகத்தையும், கண்களையும் தழுவிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல. வேலைக்கு செல்லும் சில பெண்களுக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

பொதுவாகவே பெண்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையில், மாலை நேரத்தில் தீபம் ஏற்றி விட்டு, வீட்டில் இருப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு மகாலட்சுமி மட்டும் நம் வீட்டிற்குள் வரவில்லை.

மகாலட்சுமி உடன் சேர்ந்து முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும் வருகைதந்து, வீட்டில் உள்ள பெண்ணை ஆசீர்வாதம் செய்வதாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எந்த ஒரு பெண் தன்னுடைய வீட்டில் மாலை நேரத்தில், தீபம் ஏற்றி வைத்து விட்டு, வீட்டிலேயே இருக்கின்றாளோ, அவர்களுக்கு கட்டாயம் அந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு முகத்தில் பொலிவு கூடும்.

அதாவது சில பெண்களின் முகம் தேஜஸ் ஆக இருக்கும். களையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட அழகான முக லட்சணம் என்பது, வீட்டில் தினம்தோறும் தீபமேற்றி மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

வேலை சுமை காரணமாக விளக்கு வைத்த நேரத்தில், வீட்டில் இல்லாத பெண்களுக்கு இந்த லட்சனம் கிடைக்கவே கிடைக்காது என்று கூறவில்லை. அதாவது வீட்டில் இருக்கும் சமயத்தில், அனாவசியமாக விளக்கு வைத்த நேரத்தில், பெண்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதற்காகத்தான் இந்த குறிப்பு.

எந்த காலகட்டமாக இருந்தாலும், வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்பும், முகம் கை கால்களை அலம்பி விட்டு, தீபத்தை ஏற்றி வைத்து, பின்பு ஒரு மணி நேரமாவது உங்களது வீட்டிலேயே இருப்பது பெண்களுக்கும் நல்லது. அந்த குடும்பத்திற்கும் நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உங்களது அலுவலக வேலையானது, 8 மணிக்கு முடிந்து வீட்டிற்கு திரும்புபவர்களாக இருந்தாலும் கூட, உங்கள் வீட்டில் ஒரு அரை மணி நேரமாவது தீபமேற்றி, இறைவனை வழிபட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு.

முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு வைத்த சமயத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.
Shared by M Vijayan

No comments:

Post a Comment

Post Top Ad