கற்பூரத்தில் இத்தனை மகத்துவமா? மறைக்கப்பட்ட ரகசியங்கள். - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 24 May 2020

கற்பூரத்தில் இத்தனை மகத்துவமா? மறைக்கப்பட்ட ரகசியங்கள்.


கற்பூரம். இந்தப் பொருள் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இறைவனுக்காக ஏற்றி காற்றில் கரைந்து இறைவனுக்காகவே அர்ப்பணிக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது கற்பூரம் மட்டும்தான். மற்றபடி நாம் எந்த ஒரு பொருளை இறைவனுக்காக படைத்தாலும், அதாவது பிரசாதமாக வெற்றிலை பாக்கு, நெய்வேத்தியம், தேங்காய், உடைப்பது இப்படி எதை இறைவனுக்காக கொடுத்தாலும் அதன் பயன்பாட்டினை நாம்தான் பெறப் போகின்றோம். நம்முடைய மணத்திருப்திக்காக படைக்கப்படும் படையல்கள் தான் மற்ற பொருட்கள் எல்லாம். ஆனால் கற்பூரம் அப்படி அல்ல. இறைவனுக்காக ஏற்றப்படும் கற்பூரமானது ஜோதி வடிவில் எரிந்து, கரைந்து அந்த இறைவனைச் சென்று அடைகிறது என்பதுதான் அர்த்தம். ஏன்? ஊதுவத்தியும் தான். என்று கூறி விடாதீர்கள். அதிலும் சாம்பல் மிச்சம் இருக்கும் அல்லவா? இந்த கற்பூரத்தில் மருத்துவ குணம் அதிகம் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்து இருப்போம். ஆனால் கற்பூரத்தை வைத்து செய்யக்கூடிய சுலபமான சில பரிகாரங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரங்களை எல்லாம் நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு கைமேல் பலன் அளிக்கக்கூடிய, சுலபமான கற்பூர பரிகாரங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவருக்கு தொடர்ந்து வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. வருமானத்தில் தடை, அலுவலகத்தில் பிரச்சனை, சொந்தத் தொழில் முடக்கம். இப்படி பல பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து கொண்டிருப்பவர்களுக்கு கற்பூரத்தை வைத்து ஒரு சுலபமான பரிகாரம். பெரிய அளவிலான ஒரே கற்பூரத்தை நெய்யில் 10 நிமிடம் ஊறவைத்து, அந்த கற்பூரத்தை வீட்டின் நடுப்பகுதியில், பித்தளை தாம்பாளத்தில் வைத்து, ஏற்றிவிட வேண்டும். இது யாகம் வளர்ப்பதற்கு சமமாகும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர உங்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் கட்டாயம் நீங்கும். நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால், தொழில் செய்யும் இடத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வீட்டின் தனம், தானியம், செல்வவளம் இவைகள் குறையாமல் இருக்க, இரவு நேரத்தில் சமையலறையை சுத்தம் செய்துவிட்டு ஒரு துண்டு கற்பூரத்தை ஏற்றி, அதில் மூன்று லவங்கங்களை எரித்துவிட வேண்டும். லவங்கத்துடன் சேர்ந்து எரியும் கற்பூரவாசம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நிறைவான வாழ்க்கையை தரும்.

நோயற்ற வாழ்க்கையை பெறுவதற்கு கற்பூர எண்ணெயை வாரம்தோறும் சனிக்கிழமை அன்று நம் உடம்பில் தேய்த்து குளித்து வர வேண்டும். கற்பூர எண்ணெய் இல்லை என்றால், நல்லெண்ணெயில் சிறிது கற்பூரம் போட்டு ஊற வைத்து விட்டு, அந்த எண்ணையை உடம்பிற்கு தேய்த்து குளித்து வர, எந்த பிரச்சனையும் வராது. ஒரு வாரம் செய்தால் போதாது. வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிப்பது நன்மை தரும்.

வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்க, சிகப்பு ரோஜாவை கற்பூரத்தில் எரித்து துர்க்கை அம்மனை வழிபட்டால் நல்ல பலன் உண்டு. இன்றும் வடமாநிலத்தவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு வாய்ந்தது.

சிலருக்கு அடிக்கடி விபத்து நடந்துகொண்டே இருக்கும். அதாவது வண்டியை எடுத்தால் எங்கேயாவது மோதாமல் இருக்க மாட்டார்கள். சிலருக்கு விபத்து ஏற்படும் முன் கூட்டியே ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும். சிலர் ஓரமாக நடந்து சென்றால் கூட யாராவது வந்து வண்டியில் மோதி விடுவார்கள். இப்படி அடிக்கடி நடந்து காயம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு தோஷங்கள் நீங்க, ஒரு பெரிய துண்டு கற்பூரத்தை தினந்தோறும் வீட்டில், இரவு நேரத்தில் ஏற்றி விட்டு, தூங்கச் செல்லுங்கள். உங்களது தோஷம் விரைவாக சரியாகிவிடும். தொடர்ந்து இத்தனை நாட்கள்தான் ஏற்றப்பட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முடிந்தவரை 48 நாட்கள் ஏற்றினால் நல்ல பலன் உண்டு.

சில பேர் வீட்டில் எவ்வளவுதான் வாஸ்து பார்த்து வீட்டினை கட்டி இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாஸ்து தோஷம் வந்து நம்மை வாட்டி வதைக்கும். இப்படிப்பட்டவர்கள் பல வாஸ்து நிபுணர்களை வைத்து மாற்றி மாற்றி அமைத்தாலும் எந்த ஒரு பலனும் நமக்கு இருப்பதாக தெரியாது. நல்ல பெரிய அளவில் கற்பூரம் நான்கு வாங்கி, வீட்டின் நான்கு திசைகளிலும் வைத்து விட வேண்டும். அது காற்றில் கரைய தான் செய்யும். அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம், கண்ணுக்கு தெரியாத கட்ட சக்தி, இவை அனைத்தையும் காற்றிலிருந்து தன் வசம் எடுத்துக் கொள்ளும் அந்த கற்பூரம்.


திருமணத்தடை உள்ளவர்கள் 36
 கிராம்பு, 6 கற்பூரம், ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள். இவைகளை ஒன்றாக வைத்து துர்க்கையம்ம

னுக்கு நைவேத்தியமாக படைத்து, மனதார திருமணத்தடை நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், எப்படிப்பட்ட தடையும் விரைவாக நீங்கும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். தொடர்ந்து 11 வாரம் செய்தால் நல்ல பலன் உண்டு.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நல்ல கற்பூரங்களை பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மெழுகு கற்பூரம் வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதிக கலப்படம் இல்லாத தரமான கற்பூரத்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். பூங்கற்பூரம் அல்லது கட்டி கற்பூரம் என்று சொல்லுவார்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad