சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு...! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 23 May 2020

சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வாழைத்தண்டு...!


* வாழைத்தண்டு சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைப்பதோடு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் அற்புதமான மருந்தாக செயல்படுகிறது என்றே  சொல்லலாம். பூரணமான குணத்தை அளிக்கும் உணவு மருத்துவத்தில் வாழை முதன்மையாக இருக்கிறது.

* வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் இருக்கிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து தேவையற்ற ஊளைச் சதைகளைக் குறைக்கிறது. வாழைத்தண்டு சாறு  பசி உணர்வை கட்டுக்குள் வைப்பதால் எடை குறைப்பு என்பது எளிதாகிறது.

* சிறுநீரக பாதையில் எரிச்சல், நோய் தொற்று, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதற்கு வாழைத்தண்டு மட்டுமே சிறந்த மருந்தாக இருந்து அந்தக் கல்லை கரைக்க செய்கிறது.
* வாழைத்தண்டில் உள்ள சத்துகள் இன்சுலின் உற்பத்தியை இயல்பாகவே அதிகரிக்கிறது.  இது சிறுநீரை அதிகரிக்க செய்யும் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள்  அன்றாடம் எடுக்காமல் வாரம் இரண்டு நாள்கள் பட்டியலிட்டு எடுத்துக்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும்.

* காலை வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் வாழைத்தண்டு சாறு குடிப்பதால் நெஞ்செரிச்சல் பறந்துவிடும். வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல்  பிரச்னையிலி ருந்தும் உடனடியாக விடுபடலாம். பெண்கள் மாதவிடாய் காலங்களில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் உஷ்ணம் குறையும், அதிக இரத்தப் போக்கு  கட்டுப்படும்.

* உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும். ஹீமோகுளோபின்  குறைபாடுள்ளவர்களின் குறைகளை நீக்கி இரத்த சோகையைத் தடுக்கும். பொட்டாசியம்  நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* சிறுநீரை பெருக்க செய்வதோடு நீர் சுருக்கால் அவதியுறுபவர்களுக்கு கை கண்ட பக்க விளைவு இல்லாத உடனடி நிவாரணமாக வாழைத்தண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad