நீரிழிவு நோயா கவலைப்படாதீர்கள் ! நீங்களும் நூறு வயது வாழலாம்-கீழ்கண்டவற்றை செய்தால் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday, 28 April 2020

நீரிழிவு நோயா கவலைப்படாதீர்கள் ! நீங்களும் நூறு வயது வாழலாம்-கீழ்கண்டவற்றை செய்தால் :

நீரிழிவுடன் நூறு வயது வாழலாம்
நீரிழிவுடன் நூறு வயது வாழலாம்
“பொதுவாகவே மக்களிடம் நீரிழிவு நோய் பற்றிய பயம் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு, அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும் 8 முதல் 10 வருடங்கள் வரை அவர்களுக்கு ஆயுள் குறையும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தன் வாழ்க்கை முறையையும் மருத்துவரின் பரிந்துரைகளையும் சரியாக அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து மட்டுமின்றி மற்ற நீடித்த நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் 100 ஆண்டுகள் வாழலாம் என்பதே உண்மை“, என்று கூறும் டாக்டர் மோகன் அவர்கள் நீரிழிவு நோயாளிகள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டிய 10 ரகசியங்களை கீழ்வருமாறு தெரிவிக்கிறார்.
1.ஒழுக்கமான பழக்க வழக்கங்களை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். இரவு சீக்கிரமாக படுத்து காலையில் சீக்கிரமாக எழுவது நல்லது.
2. தினமும் மிதமான உடற்பயிற்சி அவசியம். 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமான நடை பயிற்சியோ உடற்பயிற்சியோ நீச்சலோ ஏதேனும் விளையாட்டிலோ ஈடுபடலாம்.

3. நீரிழிவு நோயுள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக்கூடாது பிடித்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அதை அளவோடும் முறையோடும் சாப்பிட வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இருக்க வேண்டும். பசித்தபின் அளவோடு உண்பது நல்லது.

4. சாப்பிடும்போது வயிறு முழுவதுமாக நிரம்பும் அளவிற்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிறு சற்று காலியாக இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் அஜீரணம் வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் ஜீரணம் நல்ல முறையில் அமையும்.

5. புகை பிடிப்பது புகையிலை மெல்வது போன்ற பழக்கங்கள் ரத்த நாளங்களை கெடுத்துவிடும். அதை அறவே தவிர்ப்பது நல்லது.

6.அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் கணையம் போன்ற உறுப்புகளை பாதிப்பதுடன் உடல் பருமனையும் ஏற்படுத்தும். எனவே மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

7. மன அழுத்தம் உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது. மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். எனவே மன அழுத்தத்தை குறைக்க ஏதேனும் விளையாட்டு, இசை, பொழுதுபோக்கு போன்றவற்றில் மனதை ஈடுபடுத்தலாம். யோகா பிராணாயாமம் தியானம் போன்றவற்றை கடைப்பிடிப்பதும் நல்லது.

8. வாழ்க்கையில் பெரி தாக சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நிறைய பேர் வேலையையும் வாழ்க்கையையும் சமநிலையில் வைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். வேலைப்பளு அதிகமாகும் போது அதை எப்படி குறைத்துக்கொள்வது அல்லது வேண்டாம் என்று சொல்வது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

9.குடும்பத்துடனும் சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் இணக்கமான ஒரு உறவை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

10.நீரிழிவு நோய்க்காக நீரிழிவு நோய்க்கான மருத்துவரை மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சென்று ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வதால் நீரிழிவினால் வரக்கூடிய பல சிக்கல்களை மட்டுமின்றி உடலில் மற்ற நோய்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்ளலாம்.

மேற்கூறிய இந்த 10 ரகசியங்களை ஒருவர் முறையாக கடைபிடித்து வந்தால் 100 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை”

- டாக்டர் மோகன் (டாக்டர் மோகன் டயாபடீஸ் ஸ்பெஷலிட்டிஸ் சென்டர்.

No comments:

Post a comment

Post Top Ad