
மன்மோகன் சிங்
புதுடெல்லி:
கொரோனா
வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி
வைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில்
மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது இருக்கும் நிலையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இதைப் போன்ற
கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே,
அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது மனிதநேயமற்ற செயல் என காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment