காபி குடிப்பதனால் நரம்புத் தளர்ச்சி நோய், கல்லீரல் நோய், இதய நோய்,சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் .. Let's find out about coffee .. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 22 April 2020

காபி குடிப்பதனால் நரம்புத் தளர்ச்சி நோய், கல்லீரல் நோய், இதய நோய்,சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் .. Let's find out about coffee ..

IMG_ORG_1587353218425

காபியில் உள்ள சத்துக்கள்
காபியில் காஃபின் என்ற வேதிப்பொருளும் பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மெக்னிசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
நன்மைகள்:
காபியில் உள்ள காஃபின் என்ற வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
அதுமட்டுமின்றி நமது மூளையை பாதுகாக்க பயன்படுகிறது.
இதயத்தை வேகமாக துடிக்க வைத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
கண்பார்வைக்கு நல்லது.
சுவாசக் குழாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வு.
இரத்த நாளங்களை சுருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
காபி வளர்ச்சிதை மாற்றத்தையும் குடல் அசைவு செயல் பாட்டையும் அதிகரிக்க பயனுள்ளதாக உள்ளது.
குடல் அசைவு அதிகரிப்பதனால் மலம் எளிதாக வெளியேறும்.
காபி குடிப்பதனால் நரம்புத் தளர்ச்சி நோய், கல்லீரல் நோய், இதய நோய்,சர்க்கரை நோய் மற்றும் மன அழுத்தத்தை போக்கவும் பயனுள்ளதாக உள்ளது.
காஃபின் அளவு:
காபியில் உள்ள காஃபின் குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு 250மில்லி கிராம் அளவுக்கு காஃபின் நமது உடலுக்கு ஏற்றது. அதற்கு அதிகமானால் உடல்நல பாதிப்பு ஏற்படும்.
சிலர் காபிக்கு அடிமையாக இருப்பர் அவ்வாறு இருப்பவர்கள் காபியை அதிகமாக குடிப்பவர். எனவே, அவர்களுக்கு காபியில் உள்ள காஃபின் அளவு அதிகரித்து உடல் நலம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பு:
ஒரு கப் காபியில் 80-125 மில்லி கிராம் அளவு காஃபின் உள்ளது.
சாப்பாட்டுக்கு பின்பு காபி குடிக்க கூடாது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காபியில் அதிக அளவு சர்க்கரையை சேர்க்கக் கூடாது.
இரவு தூங்கும் முன்பு காபி குடிக்க கூடாது.
ஒரு சிலர் தலைவலி மாத்திரையை காபியோடு கலந்து சாப்பிடுவர். அவ்வாறு கலந்து சாப்பிட்டால் மாத்திரையின் பவரை குறைத்துவிடும்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிக்க கூடாது.
குறிப்பாக அல்சர், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கற்பிணி பெண்கள் காபி குடிக்கக் கூடாது.

No comments:

Post a comment

Post Top Ad