முடக்கத்தான் கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Tuesday, 21 April 2020

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதா?


முடக்கத்தான் கீரையை ஆய்ந்து நறுக்கி உளுந்தமாவு சேர்த்து இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.


இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை.
முடக்கத்தான் கீரையை இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு பல் பூண்டு, இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும் கீரை வெந்ததும் இறக்கி அதன் சாற்றை நன்கு வடிகட்டி குடிக்க மூட்டில் தங்கியிருந்த அனைத்து வலிகளும் பறந்தோடும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad