
ஹனி சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் விங்ஸ் - 500 கிராம்
சோள மாவு - அரை கப்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தேன் - 5 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
பார்பிக்யூ சாஸ் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை ( விங்ஸ்) ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் அரைத்த இஞ்சி பூண்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த
சிக்கனை எடுத்து சோளமாவு கலவையில் தோய்த்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு எண்ணெயை ஊற்றி அதில் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேனை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
2 நிமிடம் கலக்கிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொரித்த சிக்கனை எடுத்து
அடுப்பில் இருக்கும் பார்பிக்யூ சாஸ் மற்றும் தேன் கலவையில் கொட்டி கிளற
வேண்டும்.
அடுப்பை அனைத்து தட்டில் பரிமாறி அதன் மேல் வறுத்த எள்ளை தூவினால் சுவையான ‘ஹனி சிக்கன்’ ரெடி.
No comments:
Post a Comment