இந்த கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக
வைத்திருக்க லெமன் சோடா பருகலாம். இன்று இந்த லெமன் சோடாவை வீட்டிலேயே
எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

லெமன் சோடா
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை காய் - ஒன்று
எலுமிச்சை பழம் - 2
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்
சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.

செய்முறை:
சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்
(சர்க்கரை கரைந்தும் ஒரு நிமிடம் வரை கொதிக்கவிடவும்). பிறகு ஆறவைக்கவும்.
எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து கொட்டை இல்லாமல் ஆறிய பாகுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும்போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும்.
அருமையான லெமன் சோடா ரெடி.
No comments:
Post a Comment