கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டுள்ள படம- Natural Change by Corona: Image released by NASA - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday 12 April 2020

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டுள்ள படம- Natural Change by Corona: Image released by NASA

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டுள்ள படம்
நாசா வெளியிட்டுள்ள படம்
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad