செரிமான சக்தியைத் தூண்டி உணவை நன்கு ஜீரணமளிக்கும் கொத்தமல்லி பற்றி அறிவோம்...!! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 21 April 2020

செரிமான சக்தியைத் தூண்டி உணவை நன்கு ஜீரணமளிக்கும் கொத்தமல்லி பற்றி அறிவோம்...!!


தினமும் நாம் உண்ணும் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம். கொத்தமல்லி ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும்.


சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்றவற்றை நீக்கும் குணம் கொத்தமல்லிக்கு உண்டு.
செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணம் ஆகச் செய்யும். புளித்த ஏப்பம் நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையச் செய்யும். மாலை கண் நோய் உள்ளவர்கள் கொத்தமல்லி கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்.
கொத்தமல்லி கீரையில் ஏ.பி.சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்துக்களும் உள்ளன. உடலில் உள்ள கொழுப்புச் சத்துக்களைக் குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு வருவதை குறைக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad