
எச்சில் துப்பினால் அபராதம்
சிட்னி:
ஆஸ்திரேலியாவின்
நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும்
சுகாதார ஊழியர்கள் மீது வெறுப்பை காட்டும் விதமாக அவர்களை நோக்கி யாரும்
எச்சில் துப்பினாலோ, இருமினாலோ அவர்களுக்கு 5 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள்
(இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 43 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டு
வருகிறது.
தற்போது, இந்த மாகாணத்தின் சில்லரை
வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் அனைத்து
ஊழியர்களையும் பாதுகாக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
அதாவது, இவர்கள் மீது எச்சில் துப்பினாலும் அபராதம் உண்டு.
இதுபற்றி மாகாண சுகாதார மந்திரி பிராட் ஹசார்ட்
கூறும்போது, “பணியாளர்கள் மீது வெறுப்பை காட்டும் விதமாக எச்சில்
துப்புவதும், இருமுவதும் கொரோனாவின் ஆயுதங்களாக கருதப்படும். எனவே அனைத்து
அத்தியாவசிய பணி ஊழியர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டத்தை
மீறுபவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
இந்த உத்தரவு இன்று (திங்கட்கிழமை) முதல் நியூசவுத்வேல்ஸ் மாகாணம் முழுவதிலும் அமலுக்கு வருகிறது.
சில
நாட்களுக்கு முன்பு சில்லரை வர்த்தக பிரதிநிதி ஒருவர் பொருட்களை எடுத்துச்
சென்றபோது இல்வாரா என்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் வெறுப்பை காட்டும்
விதமாக அவர் மீது சிலர் எச்சில் துப்பினார். இதைத்தொடர்ந்து இந்த
நடவடிக்கையை இந்த மாகாண அரசு மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment