கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 6 July 2018

கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145)


பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது.
பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.
புதிய ஊதிய விகிதத்தின்படி, கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் முதல் நிலை (நிலை-10) உதவிப் பேராசிரியருக்கு ரூ.57,700, இரண்டாம் நிலை (நிலை-11) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 68,900 என்ற அளவிலும், மூன்றாம் நிலை (நிலை-12) உதவிப் பேராசிரியருக்கு ரூ. 79,800 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இணைப் பேராசிரியருக்கு ரூ. 1,13,400 என்ற அளவில் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பேராசிரியருக்கான ஊதியத்தைப் பொருத்தவரை முதல் நிலை (நிலை-14) பேராசிரியருக்கு ரூ. 1,44,200 என்ற அளவிலும், இரண்டாம் நிலை (நிலை-15) பேராசிரியருக்கு ரூ. 1,82,200 என்ற அளவிலும் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வருக்கு...புதிய ஊதிய விகிதத்தின்படி, இளநிலை பட்டப் படிப்புகளை மட்டும் கொண்டுள்ள கல்லூரி முதல்வருக்கு ரூ.1,31,400 மாத ஊதியத்துடன் சிறப்பு மாதப் படி ரூ. 2000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டப் படிப்புகளும் உள்ள கல்லூரி முதல்வருக்கு மாத ஊதியம் ரூ. 1,44,200 என்ற அளவிலும், சிறப்பு மாதப் படி ரூ. 3000 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தருக்கு ரூ. 2.1 லட்சம்: பல்கலைக்கழக துணைவேந்தருக்கான மாத ஊதியம் ரூ. 2.10 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மாத சிறப்புப் படியாக ரூ. 5,000 வழங்கப்படும்.
ஓய்வு பெறும் வயதில் மாற்றமில்லை: பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே உள்ளதுபோல கல்லூரி ஆசிரியர்களுக்கு 58 வயதும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 60 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதுக்குப் பின்னர் மறுபணியமர்வு வழங்கப்படமாட்டாது

Click here to read G O

No comments:

Post a Comment

Post Top Ad