Tips for Managing High Blood Sugar with a Type 2 Diabetes Diet: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 22 November 2017

Tips for Managing High Blood Sugar with a Type 2 Diabetes Diet:

சர்க்கரை நோய் - சில குறிப்புகள்
சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவினை ‘செக்’ செய்யலாம்?

நாம் உண்ணும் உணவு சாப்பிட ஆரம்பித்து 1-2 மணி நேரத்தில் சர்க்கரையின் உச்ச அளவாக காண்பிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 mg/d1 என சர்க்கரை அளவு இருந்தால் நல்லது. 160 mg/d1 அளவுக்குள்ளாவது இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. 180 mg/d1 என்பது கூடுதல் கவனம் பெற வேண்டியது. உணவுக்கு பின் எடுக்கும் இந்த அளவினைக் கொண்டு மருந்தினை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.

HbA/C என்பது என்ன? என் அப்பாவிற்கு 10 இருக்கின்றது. இந்த சோதனை முறையைக் கொண்டு கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தத்தில் உள்ள சராசரி சர்க்கரை அளவினை கணக்கிட்டு விடலாம். 10 என்ற எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் சராசரி சர்க்கரை அளவு 240 என்ற அளவினைக் குறிக்கும். பொதுவில் HbA/C  6.5-7 சதவீதத்துக்குள் இருப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

காய்கறிகளும், பழங்களும் கூட சர்க்கரையினை ஏற்றுகின்றன? பின் எதற்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடலாம் என்று கூறுகின்றனர்?

எல்லா உணவிலும் கார்போஹைடிரேட் இருக்கின்றது. இவை சர்க்கரையின் அளவினை கூட்டத்தான் செய்யும். ஆனால் நேரான சர்க்கரை, தேன், இனிப்பு பண்டங்கள் இவை மிக அதிகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவினை ஏற்றும். நார்சத்து கூடிய தானியங்கள், காய்கறிகள் இவற்றினால் வேகமாக சர்க்கரை ஏறாது. அதிலும் நிதான அளவே இருக்கும்.

பழங்களில் சிறிது அளவாக ஆப்பிள், அதிகம் கனியாத கொய்யா, பப்பாளி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் சர்க்கரை அளவு அதிகமாய் இருப்பின் பழங்களை நிறுத்துங்கள். காய்கறிகளில், நார்சத்து மிகுந்த காய்கறிகள்

நான் சர்க்கரை நோயாளி. கடந்த 4 வருடங்களாக மருந்து எடுத்துக் கொள்கிறேன். அன்றாடம் பல முறை எனக்கு உடம்பு நடுங்குவது போல் ஆகின்றது. தலைவலிக்கின்றது. பல முறை பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்து உடனே ஏதாவது சாப்பிடுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்கள் டாக்டரை ஒரே ஒரு முறை பார்த்து அத்தோடு நிறுத்தி விட்டீர்களோ!

உங்கள் மருந்தின் அளவு கூடுதலாக இருக்கலாம். அல்லது பயத்தின் காரணமாக மிக மிக குறைவான உணவினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உடனடி உங்கள் மருத்துவரை அணுகி உதவி பெறுங்கள். அதிக சர்க்கரை எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது, குறைந்த சர்க்கரை. 70 mg/d1-க்கு கீழே சர்க்கரையின் அளவு என்பது ஆபத்தானது. பொதுவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது,
* வியர்வை
* வேகமான நாடித்துடிப்பு
* சோர்வு
* தடதடக்கும் இதயம்
* பசி
* தலைவலி
போன்ற அறிகுறிகள் இருக்கும்.



திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய
* அதிக மருந்து (அ) இன்சுலின்
* நேரம் தாழ்த்தி உண்பது
* குறைந்த உணவு, குறைந்த கார்போஹைடிரேட்
* மிக அதிக உழைப்பு
ஆகியவை காரணமாக இருக்கலாம்.

அவ்வாறு ஏற்பட்டால், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, 1/2 கிளாஸ் பழ ரசம், சாதாபிஸ்கட், இரண்டொரு சாக்லேட் என ஏதாவது ஒன்றினை உடனடியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே அளவு மருந்து, அதே முறையான உணவு என இருந்தும் காலை வெறும் வயிற்றில் 140-180 என இருக்கின்றதே ஏன்?

பொதுவில் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அவ்வப்போது சற்று கூடுதல், குறைவாக இருக்கக் கூடும். உங்களின் அனுபவமும், மருத்துவ அறிவுரைகளும் உங்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விடும். ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது பழக்க வழக்க முறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. இரவில் தூக்கத்தில் உங்களது கல்லீரல் தான் சேர்த்து வைத்திருக்கும் சர்க்கரையினை உடலுக்கு அளிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் இதனை கூடுதலாகச் செய்யும். இது உங்கள் காலை அளவினை அதிகமாகக் காட்டும். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியுடன் உணவு, மற்றும் மருந்தினை மாற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.

கீழ்கண்டவற்றினை உங்களால் செய்ய முடியும்.

* முறையான உணவு நல்ல தீர்வு தரும். ஆயினும் பிடித்த சிலவற்றினை அடியோடு ஒதுக்கி வருந்த வேண்டாம். மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள்.
* உப்பின் அளவினையும் நிதானமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
* முழு தானிய உணவு, பருப்பு வகைகள், காய்கறிகள், கொழுப்பு நீக்கிய அல்லது கொழுப்பு குறைந்த பால், மோர் இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* அடர் கொழுப்பு நிறைந்த உணவுகள் யாருக்கும் நல்லதில்லை.

* வேலை பளு காரணமாக முறையான நேரத்திற்கு சாப்பிட முடியாதவர் என்றால் இதனையும் உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் மருந்தினை எடுத்துக் கொண்டு உணவு இல்லாமல் சர்க்கரை அளவு மிகவும் இறங்கி அபாயத்தில் கொண்டு விட்டு விடும்.
* ஸ்டிரெஸ் சர்க்கரை அளவினைக்கூட்டும். எனவே
* ஆழ்ந்த, நிதான மூச்சு 5-10 முறை செய்யுங்கள்
* இசை கேளுங்கள்
* கண்டிப்பாய் யோகா பழகுங்கள்

* 7-9 மணி நேரம் தூங்குங்கள்
* உங்கள் மருத்துவரிடம் 3 மாதம் ஒருமுறை சென்று அறிவுரை பெறுங்கள்.
* உடற்பயிற்சி பலன்களை அள்ளித்தருகின்றது.
* சர்க்கரை அளவினைக் குறைக்கின்றது.
* உடல் குளுகோஸ் எடுத்துக்கொள்ளும் சக்தியினை கூட்டுகின்றது.
* கொழுப்பினை குறைக்கின்றது.



* ரத்தக் கொதிப்பு குறைகின்றது.
* எடை குறைப்பு நிகழ்கின்றது.
* உடலின் இறுக்கத்தன்மை நீங்குகின்றது.
* சக்தியும், ஆரோக்கியமும் கூடுகின்றது.

இத்தனை நன்மைகளை அள்ளித்தரும் மேற்கூறிய பயிற்சிகளை இழக்கக்கூடாது.
* பல நேரங்களில் வீட்டிலேயே ரத்த பரிசோதனை செய்து கொள்வது உங்கள் உடலைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள உதவும்.
* 1/2 கப் சாலட் எனப்படும் காய்கறியோ, ஒரு கப் சமைத்த காய்கறியோ ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உள்ளங்கை அளவு சமைத்த மீன். முழு தானிய சமைத்த உணவு
* டென்னிஸ் பால் அளவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பழம்
* நார்சத்து மிகுந்த காய்கறிகள் தாராளமாக

* 1 கப் அளவில் சாம்பார், ரசம், கூட்டு என பருப்பு சேர்த்த வகைகள் என உணவின் வகைகளை பிரித்துக்கொள்ளுங்கள்
* பிரிவு 2 சர்க்கரை நோயாளிகளுக்கு 15 வருடங்களுக்கு மேல் கூடும் பொழுது இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
* பலருக்கு நான் முழுமையாய் ‘கார்போஹைடிரேட்’ எடுத்துக் கொள்ளாமல் பிரிவு 2 நீரிழிவு நோயினை முழுமையாய் தீர்வுகாண முடியுமா என பலர் கேட்கின்றனர். இது மிக கடுமையான முயற்சியாகவும், சில சத்துக்கள் கிடைக்காமல் போகக் கூடியதாகவும், மன உளைச்சலை கொடுக்கக் கூடியதாகவும் ஆகி விடும் என்பதால் இதனை பரிந்துரைப்பதில்லை.

* நான் சர்க்கரை நோயாளி. நடக்கும் பொழுது என் கால்கள் வலிக்கின்றன. ஆனால் உட்கார்ந்தவுடன் வலி நீங்குகின்றது. இது எதனால்?
உங்களுக்கு ரத்தக் குழாய் அடைப்பு பாதிப்பு இருக்கும் வாய்ப்பு அதிகமாகத் தெரிகின்றது. நடக்கும் பொழுது தசைகளுக்கு அதிக ரத்தம் தேவை. அவ்வாறு இல்லாத பொழுது கால்கள் வலிக்கும். உட்காரும் பொழுது அவ்வளவு ரத்த ஓட்டம் தேவை இல்லை என்பதனால் வலி நன்கு குறையும். ஆனால் இத்தகைய பாதிப்புகள் மாரடைப்பு, பக்கவாதம், பாத புண் இவற்றினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக அதிகம். உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவதும் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைப்பதும் மிக அவசியம்.

கர்ப்ப கால சர்க்கரை நோய் என்பது பேறு காலத்திற்குப் பிறகு சர்க்கரை அளவாகக் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் பிரிவு 2 சர்க்கரை நோய்க்கு ஆளாவர்கள் என்பதன் அறிகுறியே.

1 comment:

  1. Thanks for sharing the Valuable info about
    Diabetes

    ReplyDelete

Post Top Ad