
தமிழகத்தில் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை குழப்பங்களுக்குப் பஞ்சமில்லாமல் பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளன. இந்தச் சூழலில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாகப் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்ததோடு 1க்கு பொதுத்தேர்வையும், 2017-2018 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும் கூட இப்போதே அறிவித்துவிட்டது. இப்படிப் பல புதிய கல்வித் திட்டங்கள் திடீர் திடீர் என அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியாகத் தமிழகச் சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வி சம்பந்தமாக 41 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாகச் சிலவற்றைப் பார்ப்போம்.
* தமிழகம் முழுவதும் 4,084 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும்.
* மதுரையில் ரூ.6 கோடி செலவில் பெரிய அளவிலான நூலகம் அமைக்கப்படும்.
* அரசுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த ஆசிரியர்களுக்குக் 'கனவு ஆசிரியர்கள்' என்ற விருது வழங்கப்படும்.
* சிறந்த பள்ளிகளுக்குப் புதுமைப்பள்ளி என்ற விருது வழங்கப்படும்.
* மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா சென்று வருவதற்கு வசதி செய்யப்படும்.
* மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நிலையில் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
* ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிற்றிதழ்கள், நாளிதழ்கள் வழங்கப்படும்.
* கணினி மையங்கள் ஏற்படுத்தி கல்வி கற்பதற்கு வசதி செய்யப்படும்.
* கற்பித்தலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கருவிகள் வாங்கப்படும்.
* மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி, கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.
* மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் 2 பணி இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.
* மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
* தமிழ் படிப்பதற்குச் சிறப்பாக வழிவகை செய்யப்படும்.
* வெளிநாட்டில் இருக்கிற தமிழ் நூலகங்களுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் அடங்கும்.
இந்த அறிவிப்புகள் மாணவர்களின் படிப்பு ஆர்வத்தையும், ஆசிரியர்களின் பயிற்றுவிப்பு ஊக்கத்தையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், இந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருக்காமல் கால நிர்ணயம் செய்து இவற்றைச் செயல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளைக் கல்வித்துறை எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பில் சில நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும் நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஒருசில அறிவிப்புகள் வராதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த நிறைய முயற்சிகள் எடுத்தபோதிலும் இந்த முயற்சிக்குத் தடையாக இருக்கின்ற தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவர்கள் எளிதாகப் பள்ளிக்கூடம் தொடங்க ஆன்லைன் முறை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. கல்விப் பணியை மேற்பார்வையிடுவதற்கு நிர்வாகப்பணியை மேற்கொள்ளும் அலுவலர் அல்லாத மேற்பார்வையிடும் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படவில்லை. தொடக்கப்பள்ளிகளில் மழலைப் பள்ளிகள் தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது போன்றவை ஏமாற்றங்கள் அளிக்கின்றன.
மொத்தத்தில் இந்த அறிவிப்புகளில் உள்ள திட்டங்கள் கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்றாலும், இன்னும் சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துமா என்று பார்த்தால், அறிவிப்புகள் என்ற அளவில் மாணவர்கள் பள்ளிக் கல்வி கற்பதில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஊட்டக்கூடியதாக தெரிகிறது. ஆனால், மத்திய பாடத்திட்டத்திற்கு இணையான கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு உரிய பாடத்திட்டங்கள் மாற்றுவதற்கான பணிகள் இன்னமும் தொடங்காத சூழலில் பின்புதான் தீர்க்கமாக சொல்லமுடியும்.
- தோ.திருவரசு
புதிய பாடத்திட்டம் தயாரிக்க கல்வியாளர்களுக்கு அழைப்பு!
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 2 வரை, பாடத்திட்டத்தை மாற்றவும், 1க்கு பொதுத்தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை வடிவமைக்க, அனுபவமிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் குழுவில் ஈடுபடுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. |கணினிகல்வி |
எனவே, ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் 23.6.2017 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment