தேங்கும் வழக்குகள்; திணறும் கல்வித்துறை - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday, 19 June 2017

தேங்கும் வழக்குகள்; திணறும் கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறையில் தேங்கி யுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, பிரத்யேக சட்ட ஆலோசகர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை செயலராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல அதிரடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சட்டசபையில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட திட்டங்கள், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், நீதிமன்ற செயல்பாடுகளில் தான், மெத்தனப்போக்கு நிலவுகிறது. மாவட்ட வாரியாக, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, கலையாசிரியர்கள் நியமனம், தனியார் பள்ளிகளுக்கான இட நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பாக, பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.இதற்கு பதிலளிக்க, அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு, சட்டம், நீதிமன்ற நடைமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு இல்லை. உரிய காலத்துக்குள், நீதிமன்றம் கோரும் தகவல்களை சமர்ப்பிக்காததால், கண்டனத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதீத பணிச்சுமையோடு, நீதிமன்றங்களுக்கு அலைகழிக்கப்படுவதாக, அலுவலர்கள் புலம்புகின்றனர். பல நேரங்களில், கல்வித்துறைக்கு பாதகமாகவே தீர்ப்புகள் வெளியாகின்றன.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்கின், இறுதிகட்ட தீர்ப்பு வெளியாக இருப்பதால், சமீபத்தில் நடக்கவிருந்த கவுன்சிலிங் தள்ளிவைக்கப்பட்டது.

இதனால், 750 பள்ளிகளில் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை. கல்விசார் பணிகள் விரைந்து நடக்க வேண்டுமெனில், தேங்கிய வழக்குகளை முடிக்க, மாவட்டந்தோறும் பிரத்யேக சட்ட ஆலோசகர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க உயர்மட்ட குழு தலைவர் பால்ராஜ் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் மட்டும், 250 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்ட நடைமுறை அறியாத, கல்வித்துறை அலுவலர்களை, நீதிமன்ற தொடர்பு அலுவலராக நியமிப்பதால் பலனில்லை.அரசு வழக்கறிஞர்களை, கல்வித்துறைக்கான சட்ட ஆலோசகராக நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம், சென்னை, மதுரை கிளை ஐகோர்ட் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்," என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad