GST வரி உங்க வீட்டுப் பட்ஜெட்-ஐ எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றியமைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி வருகிற ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்களை வரையில் அனைத்திலும் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இருக்கும்.
இதன் மூலம் நாட்டின் பட்ஜெட் மட்டுமல்ல நம்முடைய வீட்டு பட்ஜெட்-இல் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு முதல் படியாக முக்கியப் பொருட்களில் ஏற்படும் வரி மாற்றங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்டோமொபைல்
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்குப் பின் எஸ்யூவி காருக்கான வரி 55 சதவீதத்தில் இருந்து 43 சதவீதமாகக் குறைகிறது. அதேபோல் சிறிய ரகக் கார்களுக்கு 30 சதவீதம் முதல் 29 சதவீதமாக வரி குறைகிறது.
உதாரணம்
அடிப்படை விலை : 4.75 லட்சம் ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 1.43 லட்சம் ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 1.38 லட்சம் ரூபாய்
சாதனங்கள்
பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின், வெயிட் கூட்ஸ் பிரிவில் இருக்கும் பல சாதனங்களின் மீதான வரி பெரிய அளவில் மாற்றமில்லை.
உதாரணம்
அடிப்படை விலை : 20,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 5,300 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 5,600 ரூபாய்
லைப் இன்சூரன்ஸ்
குறுகியகாலத் திட்டம் மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத திட்டங்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிஎஸ்டி லைப் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான வரி விதிப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 15,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 2,250 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 2,700 ரூபாய்
தங்க நகைகள்
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்திற்குப் பின் தங்க நகைகளின் மீதான வரி உயரும். இதன் படி 3 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் செய் கூலியாக 5 சதவீதம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 60,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 1,800 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 2,000 ரூபாய்
ஹோட்டல்
நீங்கள் சுற்றுலா செல்லும் போது 1,000 ரூபாய்க்கு குறைவாக வாடகை கொண்டு ரூம் வாடகைக்கு எடுத்தால் அதற்கு வரியில்லை. அதற்கு மேல் வரிப் படிப்படியாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. 5,000 ரூபாய்க்கு மேல் என்றால் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
உதாரணம்
அடிப்படை விலை : 7,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 1,400 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 1,960 ரூபாய்
சமையல் எண்ணெய்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஹோர் ஆயில்-க்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 200 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 23 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 10 ரூபாய்
விமானப் பயணம்
இந்தியாவில் விமானப் போக்குவரத்தையும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடர்ந்து திட்டமிட்டு வரும் மத்திய அரசு, ஜிஎஸ்டி வரி விதிப்பில் விமானப் பயணத்திற்கான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எக்னாமிக் மற்றும் பிஸ்னஸ் கிளாஸ் மத்தியிலான இடைவேளி மேலும் அதிகரித்துள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 5,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 300 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 250 ரூபாய்
ரயில் பயணம்
லோக்கல் ரயில், ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் எவ்விதமான பாதிப்புமில்லை. ஆனால் பாஸ்ட் கிளாஸ் மற்றும் ஏசி கிளாஸ் பயணிகள் ஜிஎஸ்டிக்குப் பின் அதிகமாகச் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
உதாரணம்
அடிப்படை விலை : 3,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 131 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 150 ரூபாய்
டெலிகாம்
2 டெலிபோன் இணைப்பு, 1 டிடிஎச் இணைப்பு கொண்டவர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் கூடுதலாக வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 2,500 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 375 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 450 ரூபாய்
உணவகம்
நீங்கள் அடிக்கடி உணவகங்களில் சாப்பிடும் நபராக இருந்தால், அதிகளவில் வரி செலுத்த வேண்டும் இதனால் உங்கள் பணத்தைச் சேமிக்கப் புதிய வழியைக் கண்டுபிடியுங்கள்.
ஏசி இல்லாத ஹோட்டல் என்றால் 12 சதவீத வரி, 5ஸ்டார் ஹோட்டல் என்றால் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி
உதாரணம்
அடிப்படை விலை : 2,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 270 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 360 ரூபாய்
ஆடைகள்
இத்துறையின் நெக்கடியின் காரணமாக ஜிஎஸ்டி கவுன்சில் 1,000 ரூபாய்க்கு குறைவான ஆடைகளுக்கு 12 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உதாரணம்
அடிப்படை விலை : 2,000 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 130 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 240 ரூபாய்
சினிமா
வீட்டில் 4 பேர் சினிமா செல்ல வேண்டும் என்றால் சிறிய டவுன்களில் இருக்கும் ஒரு திரை கொண்டு சினிமா தியேட்டர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பெரு நகரங்களில் தற்போது 120 ரூபாயாக இருக்கும் டிக்கெட் 145 ரூபாயாக உயரும்.
உதாரணம்
அடிப்படை விலை : 1200 ரூபாய்
தற்போதைய வரி அளவுகள்: 360 ரூபாய்
ஜிஎஸ்டி வரி: 336 ரூபாய்
No comments:
Post a Comment