இடைத்தேர்தலால் ஆசிரியர் கவுன்சிலிங் தாமதம்? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 6 June 2015

இடைத்தேர்தலால் ஆசிரியர் கவுன்சிலிங் தாமதம்?

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி, முதுகலை பட்டதாரி,உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் பணிபுரிகின்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் :ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதலுக்கான 'கவுன்சிலிங்' கடந்த சில ஆண்டுகளாக இணைய தளம் மூலம் நடத்தப்படுகிறது.இதற்கு ஏப்ரல் மாத இறுதியில் விண்ணப்பம் கோரப்பட்டு மே மாதத்தின் இறுதி வாரத்தில் 'கவுன்சிலிங்' முடிந்து ஜூனில் பள்ளி திறந்ததும் இடமாறுதல் பெற்றவர்கள் பணியில் சேருவதற்கான உத்தரவு வழங்கப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டிற்கான 'கவுன்சிலிங்'கிற்கு இது வரை விண்ணப்பம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 27 ல் நடைபெற உள்ளதால் 'கவுன்சிலிங்' தொடர்பாக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில்'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் பேரம் பேசி கல்வி அதிகாரிகள் மூலம் பணியிட மாறுதல் வழங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியில்லை என கூறப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்குரிய முன்னுரிமை அளித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான முறையான அறிவிப்பில்லை. இதனால் தகுதியான வெளி மாவட்ட ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad