ரஷிய தூதரகத்தில் உயர் கல்வி கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 4 June 2015

ரஷிய தூதரகத்தில் உயர் கல்வி கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது:

சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தில் நாளை 6-ந்தேதி (சனிக்கிழமை) ரஷிய உயர் கல்வி கண்காட்சி தொடங்குகிறது.
ரஷிய தூதரகம்
சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள தென்னிந்திய ரஷிய தூதரகத்தின் கலாச்சார பிரிவு சார்பில் ரஷிய உயர் கல்வி கண்காட்சி நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ரஷிய நாட்டில் உள்ள முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து தென்னிந்தியாவுக்கான ரஷிய தூதரகத்தின் கலாசாரப் பிரிவுக்கான துணைத் தூதர் செர்கெய் எல்.கோடாவ், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்விக் கண்காட்சி
ரஷிய கலாசார மையம் தொடர்ந்து 16 ஆண்டுகளாக இந்தக் கல்விக் கண்காட்சியை நடத்துகிறது. ரஷியாவில் உள்ள 650 பொறியியல் மற்றும் 63 மருத்துவப் பல்கலைக்கழகங்கள், இந்திய மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வானியல் ஆராய்ச்சி, பொறியியல், தொழில்நுட்பம், உயிரி-வேதியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து செயலாற்றி வருகிறது. இந்திய மாணவர்கள் ரஷியாவில் கல்வி கற்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வளர்க்கும்.

பல்கலைக்கழகங்கள்

இதில் ரஷிய நாட்டில் உள்ள 7 முன்னணி அரசுப் பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்கின்றன.
இந்தப் பல்கலைக்கழக பிரதிநிதிகள், இந்திய மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், நியூக்ளியர் பவர் டெக்னாலஜி, பவர் பிளாண்ட் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கடிதத்தை கண்காட்சியில் வழங்குகிறது.
மதுரையில்9-ந்தேதி கண்காட்சி
சென்னையில் நடைபெறும் கண்காட்சியைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ஓட்டல் மதுரை ரெசிடன்சியில் வரும் 9-ந்தேதி அன்று இந்த கண்காட்சி நடக்கிறது. தொடர்ந்து திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதரகத்தின் துணைத் தூதர் டிமிட்ரி வி.லோமாகின், ஸ்டடி அப்ராட் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad