சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக
பிஇ விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப
ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுளளது.
மே.6-ம்தேதி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை நடைபெறவுள்ளது.
விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி
தேதி ஜூன் 5-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் விற்பனை
மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 12-ம் தேதி வரை
தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம், அனைத்து படிப்பு
மையங்களிலும் ரூ.800 கட்டணம் (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.400) செலுத்தி
பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
பூர்த்தி அதற்கான தொகையை வரைவோலையாக இணைத்து விண்ணப்பிக்கலாம். அஞ்சல்
மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ 850 க்கான (எஸ்சி, எஸ்டி ரூ.450)
ரூ50 அஞ்சல் கட்டணம் சேர்த்து சென்னை மாற்றத்தக்க வங்கி வரைவோலை பதிவாளர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப்
பல்கலைக்கழக, அண்ணாமலைநகர் என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பம் பெற்றுக்
கொள்ளலாம்.
பொறியியல் படிப்பிற்கு தனி கவுன்சிலிங்: இந்த ஆண்டு பிஇ
படிப்பிற்கு 2130 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்படவுள்ளனர்.
அண்ணாமலைப்பல்கலையில் தனி கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்வு
செய்யப்படுவார்கள்.
தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள்
மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு
விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு (Counciling)
தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக
இணையதளம்
www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில்
பார்க்கவும். மேலும் au_regr@ymail.com என்ற மெயில் முகவரியையும் மற்றும்
உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு
தகவல் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment