ஒருவாரம் முருங்கை இலை ஜுஸ் குடிச்சா உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 24 June 2021

ஒருவாரம் முருங்கை இலை ஜுஸ் குடிச்சா உடலிற்கு கிடைக்கும் நன்மைகள்:

 

முருங்கைக்கீரையில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?


அத்தகைய முருங்கைகீரை பயன்படுத்தி 7 நாட்களில் எப்படி உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 1/4 கப்
தண்ணீர்- 1 கப்
எலுமிச்சை- 1/2
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை

முதலில் முருங்கைகீரையை மிக்ஸியில் போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதனை வடிகட்டி அதனுடன் 1 எலுமிச்சையைப் பிழிந்து சிறிதளவு தேன் கலந்தால் அற்புதமான முருங்கைகீரை ஜூஸ் தயார்.

பயன்படுத்தும் முறை

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு குடிக்கலாம் அல்லது உணவு உண்ட பின் 30 நிமிடம் கழித்து இதனை குடிக்கலாம்.மேலும் இந்த ஜீஸை தொடர்ந்து 7 நாட்கள் குடித்த பின் இடைவெளி விட்டு பின் மீண்டும் பருகலாம்.முக்கியமாக ஏதேனும் மருந்து மாத்திரைகள் அன்றாடம் இடுத்து வருபவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து இந்த ஜீஸை குடிக்கலாம்.

பயன்கள்

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும்.இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கலோரிகளை வேகமாக கரைத்து, தொப்பை, உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும், பலமும், தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்

No comments:

Post a Comment

Post Top Ad