உங்கள் சான்றிதழ்கள்
தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம்
இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம்
விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பதாரரின் புகைப்படம்
இருப்பிடச்சான்று
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும்.
Login
செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment
Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records Due
To Disasters என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து
உங்களது CAN எண்ணைக் கொடுக்கவேண்டும். CAN எண் இல்லாதவர்கள் Generate CAN
என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும்.
CAN எண் பதிவு செய்தபின்னர் வரும் பக்கத்தில் உங்களது விவரங்களை நிரப்பவேண்டும். பின்னர் Submit கொடுக்க வேண்டும்.
பின்னர்
List of Documents பகுதியில் (Photo, Current Address Proof, Self
Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும். அதில்
கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளலை அறிந்து
அதற்கேற்ப Upload செய்ய வேண்டும்.
தொடர்ந்து ஆன்லைன் மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பின்னர்
அதிகாரிகளால் உங்களது விண்ணப்பம் சரிபார்த்த பின்பு உங்களது
தொலைப்பேசிக்கு செய்தி வரும். அதன் பின் இதே லாகின் ஐடி மூலம் உள்நுழையும்
போது உங்களுக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment