சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்
அடிக்கடி ஒரே மாதிரியான சாலட்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அது
ருசியின்மையாகிவிடும். அவர்களுக்கு இது ஒரு புது வகையான சாலட்.
சத்துக்களும், சுவையும் நிறைந்தது. தயார் செய்து சுவைத்துப்பாருங்கள்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய், குடைமிளகாய், கத்தரிக்காய் - 50 கிராம்
பார்மேஷன் பாலாடைக்கட்டி - 10 கிராம்,
மிளகு 10 கிராம்,
துளசி, பூண்டு, ஆலிவ் ஆயில், உப்பு - தேவையான அளவு
இதன் செய்முறை எளிதானது. முதலில் சாஸ் போன்ற கலவையை தயார்செய்ய வேண்டும்.
அதற்காக குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கி, தோசைக் கல்லை சூடாக்கி
எண்ணெய்விடாமல் சுட வேண்டும். குடை மிளகாயை சுட்டதும் அத்துடன் துளசி,
ஆலிவ் ஆயில், மிளகு, பூண்டு, உப்பு போன்றவைகளை சேர்த்து மிக்சியில் சாஸ்
போன்று அரைத்தெடுங்கள்.
கத்தரிக்காயை வட்டமாக மெலிதாகவும், வெண்டைக்காயை நீளவாக்கிலும்
வெட்டுங்கள். இரண்டையும் அடுப்புத்தணலில் பதமாக கருகாத விதத்தில் சுட்டு
எடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் முதலில் கத்தரிக்காயை அடுக்குங்கள். அதற்கு மேல்
பாலாடைக்கட்டியை கலந்துவிட்டு, வெண்டைக்காயை அடுக்குங்கள். அதன் மேல்
குடைமிளகாய் சாஸ் சேர்த்து சுவையுங்கள்.
இந்த சாலட் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஏற்றது.
இதில் சேர்க்கப்படும் வெண்டைக்காயில் பெகடின் என்ற நார்ச்சத்து
நிறைந்திருக்கிறது. இது இதய துடிப்பை சீராக்குவதோடு, கெட்டகொழுப்பையும்
குறைக்கும். கத்தரிக்காயிலும் நார்ச்சத்து இருக்கிறது. அது குடல்
புற்றுநோயை தடுக்கும் சக்திகொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் சத்துக்களும்,
பீட்டா கரோட்டினும் உள்ளது. கொழுப்பு மிக குறைவாகவே உள்ளது.
பாலாடைக்கட்டியில் கால்சியமும், வைட்டமின் டி சத்தும் அதிகம் இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
Friday, 28 May 2021
சர்க்கரை நோயாளிகளுக்கு ‘சுட்ட வெண்டைக்காய் சாலட்’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment