செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.
செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பூப்படையாத பெண்களும் பூப்படைந்து விடுவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க இந்த செம்பருத்திப் பூ அதிக அளவில் பயன்படுகின்றது.
இதனை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி குடித்து வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
செம்பருத்திப் பூவின் கஷாயம் பல நன்மைகளை தருகின்றது. தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். இந்த செடியின் பூக்கள் தலை முடி அழகாக பயன்படுகின்றது.
ஐந்து செம்பருத்தி பூக்களை 48 தினம் ஒரு ஆண் தின்று வந்தால் ஆண்மை குறைபாடு சரியாகும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி வாய்புண், வயிற்றுபுண் வரும் அதற்கு செம்பருத்தி பூவின் இதழ்களை ஒரு மாத காலம் தினமும் மென்று வந்தால் இப்பிரச்சனை தீர்வு கிடைக்கும்.
செம்பருத்தி பூ உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.செம்பருத்தி பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
No comments:
Post a Comment