கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் என்ன செய்ய வேண்டும்?: சுகாதாரத்துறை விளக்கம்:What should returnees do from Corona ?: Health Explanation - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 22 July 2020

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் என்ன செய்ய வேண்டும்?: சுகாதாரத்துறை விளக்கம்:What should returnees do from Corona ?: Health Explanation

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் என்ன செய்ய வேண்டும்?: சுகாதாரத்துறை விளக்கம்
கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் என்ன செய்ய வேண்டும்
பெங்களூரு :

கர்நாடகத்தில் ஜெட்வேகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்தை கடந்து விட்டது. அதுபோல் பலியும் 1,500-ஐ நெருங்கியுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் சுமார் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலம், வெளிமாவட்டத்தினர் பெங்களூருவை காலி செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவரு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

* வீடுகளில் 14 நாட்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகியே தனிமையில் இருக்க வேண்டும்.

* டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதுடன், அவர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

* குடும்பத்தினர் உடன் கூட தொடர்பில் இருக்கக் கூடாது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து மற்ற அறைகளுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

* கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், தங்கியுள்ள அறையை அடிக்கடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க பாடல் கேட்பது, நடனமாடுவது, செல்போனில் உறவினர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

* முக்கியமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டு தனிமையில் இருப்பவர் மதுபானங்கள் குடிக்க கூடாது. புகையிலை மற்றும் பிற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad