சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஐஸ் க்யூப் மசாஜ் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 8 July 2020

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஐஸ் க்யூப் மசாஜ் :

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஐஸ் க்யூப் மசாஜ்
ஐஸ் க்யூப் மசாஜ்
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப்  பயன்படுத்தலாம்.

* ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள். பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்யும்.

* சிலருக்கு மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.

* அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். இதனால்  சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

* சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன்  துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.

* கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ்  செய்யலாம். தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

* கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி, அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம். க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad