தங்கம் விலை: வாடிக்கையாளர்களை அழ வைக்கும் தங்கம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 8 July 2020

தங்கம் விலை: வாடிக்கையாளர்களை அழ வைக்கும் தங்கம்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே ஒரு சில நாட்களைத் தவிர தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் மீண்டும் 37,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஜூலை 7) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,641 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,622 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல, நேற்று 36,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 152 ரூபாய் உயர்ந்து 37,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.4,853லிருந்து இன்று ரூ.4,872 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 38,824 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 152 ரூபாய் உயர்ந்து 38,976 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,672 ஆகவும், டெல்லியில் ரூ.4,702 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,727 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,618 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,552 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,614 ஆகவும், ஒசூரில் ரூ.4,614 ஆகவும், கேரளாவில் ரூ.4,499 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையான ரூ.53.60 ஆகவே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 53,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a comment

Post Top Ad